ஈராக்கில் திருமணத்திற்கு முன்பு உறவு கொண்ட ஜோடி ஒன்றை ஐ.எஸ். குழு கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது.
2723581600000578-3017800-image-m-69_1427717583711
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதி க்கம் செலுத்தும் ஐ.எஸ். ஆயு தக் குழு கொலை, கொள்ளை, கள்ளக்காதல், கற்பழிப்பு, ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றது.

இந்நிலையில் ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள திருமணமாகாத ஜோடி ஒன்று உடலுறவில் ஈடு பட்டது அந்த குழுவுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து நகரின் வீதியில் அவர்களை இழுத்து வந்து அவர்களின் கண்களை கட்டி மண்டியிட செய்துள்ளனர்.

இதன் பின் அவர்கள் புரிந்த குற்றத்தை ஒருவர் மக்களுக்கு ஒலிபெருக் கியின் மூலம் அறிவித்துள்ளார்.


இறுதியில் ஆயுததாரிகள்  அனைவரும் சேர்ந்து அவர்களை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர், இச்சம்பவத்தை அங்கு கூடியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version