பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுனேஸின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செங்களம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தலைமையிலான குழுவினர், இஸ்லாம்பாதிலுள்ள நூர் பான் விமான நிலையத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) சென்றடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரை, பாகிஸ்தான் பிரதமர் நாவாஸ் ஷெரீப் தலைமையிலான குழுவினர் வேற்றனர். அத்துடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு அரச மரியாதையும் அளிக்கப்பட்டது.