கிர்குக்: ஈராக்கில் குர்திஷ் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதியின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் ராணுவம் மற்றும் குர்திஷ் மாகாண ராணுவத்துக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.

14-1429011835-isis-incredible-video-shows-moment-a-suicide-bomber-car-explodes-in-midair-600

இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது உக்கிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைப் படை முயற்சியை முறியடித்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், குர்திஷ் ராணுவ நிலைகளை நோக்கி ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதியின் கார் சென்று கொண்டிருக்கிறது..
ஆனால் அது இலக்கை அடையும் முன்னரே குண்டுவெடிப்பில் சிக்கி 100 அடி உயரத்துக்கு வானில் தூக்கி வீசப்பட..
நடுவானில் பல முறை பல்டி அடித்தபடியே அந்த கார் வெடித்து சிதறுகிறது… அதாவது தற்கொலைப் படை தீவிரவாதி ஓட்டி வந்த அந்த வெடிகுண்டுகள் நிரம்பிய கார் குர்து இன படையினர் வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி நடுவானில் தூக்கி வீசப்பட அப்போது காரில் இருந்த குண்டுகளும் வெடித்து நடுவானில் தீப்பந்தாக சிதறி விழுந்தது…
இந்த வீடியோ காட்சியை குர்திஷ் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version