ங்கதேச வீரர் ரூபெல் ஹொசைனுடன் இணைந்திருந்த படத்தை இணையதளத்தில் வெளியிடப் போவதாக கூறி  ரூபெல் ஹோசைன் மிரட்டுவதாக அவர் மீது வங்கதேச நடிகை நஷ்னின் அக்தர் ஹேப்பி மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வீடியோ இணைப்பு
வங்கதேச பந்துவீச்சாளர் ரூபெல் ஹோசைன் நஷ்னின் அக்தர் ஹேப்பி என்ற 19 வயது நடிகையுடன் காதல் கொண்டு இணைந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ரூபெல் ஹோசைன் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் மீது நஷ்னின் அக்தர் டாக்கா போலீசில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து டாக்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதால் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டியிலும் பங்கேற்றார்.

உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபெல்ஹோசைன் சிறப்பாக பந்து விசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் வங்கதேச அணி முதல் முறையாக உலகக் கோப்பை காலிறுதிப போட்டிக்கு தகுதி பெற்றது. ரூபெல் ஹொசைன் கிரிக்கெட் வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவர் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கப் போவதாக நடிகை நஷ்னின் அக்தர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ரூபெல்ஹோசைனுடன் இணைந்திருப்பது போன்ற படத்தை இன்டர்நெட்டில் வெளியிடப் போவதாக ரூபெல் ஹொசைன் மிரட்டுவதாக நஷ்னின் அக்தர் மீண்டும் டாக்கா  போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த இருவருக்குமிடையே ஸ்கைப்பில் நடந்த உரையாடலின் போது, இது போன்று மிரட்டியதாக தனது புகாரில் நஷ்னின் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவுகளையும் நஷ்னின் போலீசாரிடம் அளித்துள்ளார்.

ஸ்கைப்பில் நடந்த உரையாடல் விபரம்

ரூபெல் : இதுபோன்ற உன்னோட வீடியோக்களை நீ பார்த்திருக்கிறாயா?

ஹேப்பி:
நான் உன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டேன்.. நான் செத்து விட்டது போல உணருகிறேன்

 ரூபெல் :  சும்மா நடிக்காதே

ஹேப்பி:   அல்லா இதனை பார்த்து கொண்டிருக்கிறார்…

 ரூபெல் : அல்லாவின் பெயரை நீ உச்சரிக்காதே… நீ இதனை ரெக்கார்ட் செய்து கொண்டிருக்கிறாய்

ஹேப்பி:  எப்படி இது போன்று  பேச முடிகிறது. உனக்கு குற்றஉணர்ச்சியே உனக்கு கிடையாதா?

 ரூபெல் : இந்த ஒன்னை பார்த்துட்டே அதிர்ச்சியானா எப்படி?  இதுமாதிரி இன்னும் நிறைய இருக்குதே

ஹேப்பி: ச்சீ ….ச்சீ

ரூபெல் :சீச்சினா என்னா அர்த்தம்?

ஹேப்பி: உன்னை அல்லா பார்த்துக்குவார்

 ரூபெல் : இப்போ என்ன பண்ணிட்டுருக்காக… இன்னைக்கு யார் கூட உறங்கப் போறா?

ஹேப்பி:  இது போன்றுலாம் பேசாதே

 ரூபெல் : நீ என்ன செஞ்சாலும் எனக்கு தெரிஞ்சிடும்

ஹேப்பி:  நீ என்ன மிரட்டுறியா?

ரூபெல் : எனக்கு உன்ன மிரட்டனும்னு எந்த நோக்கமும் இல்லை…?நீ என் வாழ்க்கையை சீரழித்துவிட்டாய்.. எனது குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டாய்…

ஹேப்பி:  நீ செஞ்சதெல்லாம் தப்பா தெரியலயா?தயவு செய்து என்னை கொன்னுடு

 ரூபெல் : எங்கிட்ட இருக்குற படத்தையெல்லாம் ஒன்னொன்னா அனுப்புறேன்… பார்த்துட்டு டெலிட் பண்ணிடு ஓ.கே.வா

ஹேப்பி:  அசிங்கமா இல்ல இது போன்று பேச..நீயே அழி எனக்கு அது தேவையில்லை..

 ரூபெல் : உன்னோட மொபைல் போன் எங்கே?

ஹேப்பி:  எங்கிட்ட மொபைலே கிடையாது

ரூபெல் :  என்ன இதெல்லாம் ரிக்கார்ட் பண்ணிருக்கிறாயா… உனக்கு எப்படி இந்த புத்தி வந்தது

ஹேப்பி:   ஆமா ரிக்கார்ட் பண்ணிருக்கிறேன்.

இப்படி முடிகிறது ரூபெல்- நஷ்னின் அக்தர் உரையாடல்

Share.
Leave A Reply

Exit mobile version