22 வயதான யாழ்ப்பாண யுவதியொருவர் 61வயது தாத்தாவில் காதல் வசப்பட்டு, அவருடன் குடியும் குடித்தனமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோப்பாயை சேர்ந்த யுவதியும், பளையை சேர்ந்த தாத்தாவும் குடும்பம் நடத்திய பின்னர், கர்ப்பிணியான யுவதி, தமக்கு தெரிந்த குடும்பம் ஒன்றின் வீட்டில் சென்று குழந்தை பிரசவித்தபோது, ஆடிய அதிர்ச்சி நாடகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோப்பாயை சேர்ந்த இந்த யுவதியின் வீட்டிலிருந்த எண்ணெய் செக்கில் பணிபுரிந்து வந்தவர்தான் இந்த தாத்தா.

காதலுக்கு கண்ணில்லையே. தெய்வீக காதலின் முன்பாக வயதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைத்த இருவரும் காதல் வசப்பட்டுவிட்டனர். தாத்தா ஏற்கனவே பேரப்பிள்ளையெல்லாம் கண்டவராம்.

தாத்தாவுடன் ஏற்பட்ட தெய்வீக காதலால் யுவதியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தாத்தாவின் வாரிசொன்றை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்தார்.

இனியும் பொறுத்தால் வீட்டில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என நினைத்தவர், அனைவரும் அசரும் விதமான திட்டமொன்று தீட்டினார்.

திடீரென காரணமில்லாமல் தாயாருடன் சண்டைபிடித்துள்ளார். சண்டை முற்றியதும், கோபத்தில் வீட்டைவிட்டு செல்வதைப்போல வெளியேறிவிட்டார்.

வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று இறங்கியுள்ளார். செல்லும்போது தன்னை முற்றிலும் மாற்றி, கழுத்தில் மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம் என சென்றுள்ளார். யுவதியில் நல்ல அன்பான அந்த குடும்பத்துடன் சில நாட்கள் தங்கப் போவதாக கூறியுள்ளார்.

தான் திருமணம் செய்துவிட்டதாகவும், கணவன் கட்டாரில் உள்ளதாகவும்,விரைவில் பிரசவம் நடக்கவுள்ளதாகவும், ஆனால் உதவிக்கு ஆள் இல்லையென்றும் கூறி வருந்திருக்கிறார்.

அந்த அப்பாவி உறவுக்காரர்களும், நாங்கள் இருக்கும்போது எதற்காக யோசிக்கிறாய்? இங்கிருந்து பிரசவத்தை முடித்துவிடு என அங்கேயே மறித்துவிட்டனர்.

குழந்தை பிரசவிக்க என்னதான் தலைமறைவானாலும், காதலனை சந்திக்காமலிருக்க முடியாதல்லாவா. 61 வயது காதலனை தொலைபேசியில் அங்கும் அழைத்துள்ளார்.

தனது கணவனின் தந்தையென அங்கு அறிமுகப்படுத்தினார். தாத்தாவும் மாமா என்ற போர்வையில் அங்கு அடிக்கடி சென்று காதல்மழை பொழிந்துள்ளார்.

யுவதி குழந்யொன்றை பிரசவித்த பின்னரும், தற்போதும் அங்கேயே தங்கியுள்ளார். தாத்தாவும் அங்கு அடிக்கடி சென்று தங்கி வருகிறாராம்.

இதனை எப்படியோ மோப்பம் பிடித்த யுவதியின் உறவினர்கள், அந்த பகுதி சமூகசேவை உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version