டெல்லி: காமசூத்ராவை உலகத்திற்கு அறிமுகம் செய்திருந்தாலும், செக்ஸ் மகிழ்வில் இந்தியா உலக அளவில் 7வது இடத்தில்தான் இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு.
டூரெக்ஸ் நிறுவனம், உலக அளவில் 26 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தி இந்த தகவலை கண்டுபிடித்துள்ளது. இதில்பங்கேற்றவர்கள் அனைவருமே 16 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
உலக அளவில் 44 சதவீதம் பேர், செக்ஸ் வாழ்க்கையில் பரிபூரண திருப்தியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
04-1430730025-sex2323-600
சுவிட்சர்லாந்து எல்லாத்திலும் முதலிடம்
திருப்தியடைந்தோர் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலுள்ளது.

ஏற்கனவே வேறு ஒரு அமைப்பு எடுத்த ஆய்வில், இந்த நாட்டு மக்கள்தான், கவலைகளின்றி, மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரியவந்திருந்தது.

எனவே, செக்ஸ் திருப்தி, அவர்களை வாழ்விலும் திருப்தியடையச் செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

முதல் ஐந்து இடங்கள்
திருப்தியடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டுக்கு இரண்டாவது இடமும், இத்தாலிக்கு மூன்றாமிடமும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கிரீஸ் மற்றும் பிரேசில் நாடுகள் உள்ளன.
ஆப்பிரிக்க நாடும் உள்ளது
டாப் 10 நாடுகளில் நெதர்லாந்து, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜெர்மனி மற்றும் சீனாவும் உள்ளன. ரொமான்டிக் நாடு என்று வர்ணிக்கப்படும் பிரான்ஸ் நாடு முதல் பத்து இடங்களுக்குள் வரமுடியவில்லை.
நம்ம நிலைமை இப்படியாகனுமா..
உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் ஆர்கசம் எனப்படும், உச்சநிலையை வைத்தே செக்ஸ் திருப்தி கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் இந்தியர்களுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. உச்சநிலையை அடைய வழிகாட்டும் காமசாஸ்திரம் படைத்த நாட்டில், நிலைமை இப்படி மோசமானது வேதனையே.
Share.
Leave A Reply

Exit mobile version