விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை திறைசேரிக்கு வழங்கியபோது திறைசேரிக்கும் இராணுவத்திற்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் எரியூட்டப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இந்தக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான எந்த ஆவணங்களும் இராணுவத்திடம் இல்லையெனவும் தெரியவருகிறது.

ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் விடுதலைப் புலிகளிடமிருந்து எவ்வளவு தொகை பணம் மற்றும தங்கம் கைப்பற்றப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத் தை உரிய நடைமுறைகளின் அடிப்படையில் அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாக அப்போதைய இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார்.

புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் பணம் என்பன பார ஊர்த்திகள் மற்றும் உழவு இயந்திரங்கள் மூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தில் 310 தொன் தங்கத்தை சிலர் இரகசியமான முறையில் ஜப்பானுக்கு விற்பனை செய்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது சம்பந்தமாக குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்த போதிலும், பலமிக்க சக்தி ஒன்று தலையிட்டு அந்த விசாரணைகளை நிறுத்தியதாக அந்தப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் கேட்டபோது, இந்த விடயம் குறித்து எதனையும தன்னால் கூற முடியாது எனவும், பாதுகாப்பு செயலாளரிடம் அது பற்றிக் கேட்குமாறும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version