பொதுமக்கள் சுத்தமானதும் சுகாதாரமானதுமான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில்  மட்டக்களப்பு  பிரதேசத்தில்  இவ்வுணவகம்  கண்டுபிடிப்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார பணிமனைப்பகுதிகளில் சுகாதாரத்துக்கு கேடான முறையில் செயற்படும் உணவு விடுதிகள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இன்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுத்தமானதும் சுகாதாரமானதுமான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் என்.ஜெயரஞ்சன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர பொதுச்சுகாதார பரிசோதகர்  மற்றும் மட்டக்களப்பு சுகாதார பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  இணைந்து  இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் உணவு விடுதியொன்றை தற்காலிகமாக மூடுவதற்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

அத்துடன் உணவு விடுதியினை சுத்தமானதாகவும் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் நடாத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இதேபோன்று மென்பானம் மற்றும் ஐஸ்கிரிம் தயாரிக்கும் வர்த்தக நிலையங்களும் பரிசோனைக்குட்படுத்தப்பட்டதுடன் அங்கு சுகாதார விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

வெளியீடுகளை சுகாதாரத்துக்கு உகந்த முறையில் தயாரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

PHI-1

Share.
Leave A Reply

Exit mobile version