மதுரை: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க ஏகப்பட்ட அமர்களத்தொடு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
சித்திரை திருவிழா முடிந்தும் இன்னும் மதுரையில் விழா கொண்டாட்டம் குறைந்த பாடில்லை. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான திருவிழா தான்.
மக்களின் முதல்வர் மீண்டும் மாநில முதல்வராக பதவி ஏற்க ஏகப்பட்ட அமர்களத்தொடு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதயாத்திரையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து திருபரங்குன்றம் கோயில் வரை சுமார் 13 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
இது மட்டும் அல்லாமல் காவடி, யானை, குதிரை, பட்டாசு, கேரளா மேலதாளத்தோடு அம்மாவின் கோஷமிட்டு பெரும் அணியாக
சென்றனர். இலவச தண்ணீர், பழங்கள், உணவுகள் என பாதயாத்திரைக்கு வந்தவர்களுக்கு கொடுத்து அசத்திவிட்டனர். இதில் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா பாதயாத்திரை தொடக்கத்தில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு கழண்டு கொண்டு விட்டார்.
ஆனால் மக்கள் கடும் ஆவேசத்துடனே இருந்தனர். காரணம், பெரும் கூட்ட நெறிசலில் சிக்கி மக்கள் தவித்தனர்.
ஆகமொத்தம் மதுரை மக்களுக்கு ஆதங்கமும், கழக உறுப்பினர்களுக்கு குதூகலமும் நிறைந்ததாக இந்த பாதயாத்திரை அமைந்தது.
அமைச்சர் செல்லூர் ராஜுவின் அதிரடி நடவடிக்கையால் சீமான் அதிர்ச்சி!!
நான் இப்போ என்ன செய்வேன்… எதைவைத்துகொண்டு அரசியல் செய்வேன்?
அம்மா நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்!