வத்தளை – பள்ளியாவத்தை பிரதேசத்தில் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியொன்றில் இருந்து ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சாரதி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏற்கனவே, வீதியில் இரண்டு விபத்துகளை ஏற்படுத்தி சந்தேகத்திற்கிடமான தப்பிச் செல்ல முனைந்த குறித்த முச்சக்கரவண்டியை காவல்துறையினர் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, சடலத்துடன், மேலும் இரண்டு பேர் பயணித்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு புனித யோசப் வீதியின் பாலத்திற்கு அருகில் இன்று முற்பகல் அடையாளம் காணப்படாத ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

55 மற்றும் 65 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சடலம் தற்போது நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
01-06-2015

sadalam

நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட காசல்ரீ நீர்­த் தேக்­கத்தில் உருக்குலைந்த நிலையில் ஆணொ­ ரு­வரின் சட­லம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நண்­பகல் 12 மணி­ய­ளவில் இந்தச் சடலம் மீட்­கப்­பட்­ட­தாக நோர்வூட் பொலிஸார் தெரி­வித்­தனர்.

நோர்வூட் நியூ­வெ­லி­கம பகு­தியில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் அழு­கிய நிலையில் சடலம் ஒன்று கிடப்­பதை அறிந்து நோர்வூட் பொலி­ஸா­ருக்குத் தகவல் வழங்­கி­யுள்ளார்.

அதன் பேரில் பொலிஸார் ஸ்தலத்­திற்கு விரைந்து ஆணின் உருக்­கு­லைந்த சட­லத்தை மீட்­டுள்­ளனர்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version