மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் குடிசை ஒன்றும் தென்ன மரங்கள் ஐந்தும் தீப்பிடித்து எரிந்தள்ளதுடன் குடும்பப் பெண் ஒருவர் மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

pen-1நேற்று மாலை  5.45 மணியளவில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில்  கனேயபிள்ளை ஐயாதுரை என்பவரது குடிசையே தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் அவரடைய மகளான ஐயாதுரை ரதி (வயது – 30) என்பர் மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் விபத்தில் பெண் ஒருவர் பலி! எட்டுபேர் காயம்![படங்கள் இணைப்பு]
01-06-2016

(20)மன்னார் பிரதான பாலத்தடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.

எட்டுப் பேர் காயமடைந்தனர். கற்பிட்டியில் திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று விட்டு நேற்று ஞாயிற்றுகிளமை இரவு புறப்பட்ட படி ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை மன்னார் தீவையும் நிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான தாம்போதியில் விபத்துக்குள்ளாகியதில் ஒரு பெண் பலியானதுடன் குறித்த வாகனத்தில் பயணித்த எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.

பாலத்தை அண்டிய தாம்போதி பகுதியில் வேகமாக வந்துகொண்டிருந்த படி ரக டிப்பர் வாகனம் வேகக்கட்டுபாட்டை இழந்ததினால் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. .

மன்னார் எருக்கலம்பிடியை சேர்ந்த முனாஸ் முனிதா (வயது 52) என்வரே சம்பவத்தில் உயிரிழந்தார். காயமடைந்த எட்டு பேரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

எம்.றிஸ்வான(வயது 50) எப்.ஜஸ்மிலா(வயது 54) எம்.சகானா(வயது 9) ஆர்.றம்சா(வயது 19) ஆர்.தஸ்லினா(வயது 50) ஆர்.தஸ்விமா(வயது 15) ஆர்.றிஸ்கா(வயது 10) எஸ்.எச்.முனபர்(வயது 37) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

Share.
Leave A Reply

Exit mobile version