“காய்ச்சல் என்டு முல்லைத்தீவு ஆசுபத்திரிக்கு போன என்ர wife மூன்டு நாளா மயக்கத்திலேயே வச்சிருந்துட்டு இந்த முதலாம் திகதி கொண்டுட்டாங்கள்”

முள்ளியவளை மூன்றாம் வட்டாரம் முல்லைத்தீவை சேர்ந்த வேலுப்பிள்ளை மங்களதாசனின் மனைவி ஜெயரஜனி (வயது-26) காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வவுனியா வைத்தியசாலையில் எந்த ஒரு காரணமும் கணவனுக்கோ அல்லது ரஜனியின் உறவினர்களுக்கோ தெரிவிக்காமல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ICU வில் சிகிச்சை அளிக்கப்பட்டார்.

உறவினர்கள் காரணம் கேட்க முற்பட்டபொழுது அங்கே பொறுப்பில் இருந்த வைத்திய அதிகாரி “உங்களுக்கெல்லாம் காரணம் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்றும் “நாங்கள் சொல்லுற இடத்தில நீங்கள் கையெழுத்து போட்டா காணும்”என்றும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இறுதியாக 31.05.2015 அன்று மாலை ரஜனி 90% குணமடைந்துவிட்டார் என்று வைத்தியர்கள் கூறிய மறுநாள் அதிகாலையில் கர்ப்பிணித் தாயான ஜெயரஜனி காலமானார் . ஜெயரஜனியின் மரணத்திற்கு சரியான காரணம் எதுவும் வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

இது வைத்தியர்களின் அசமந்தபோக்கினாலேயே ஏற்பட்டதென ஜெயரஜனியின் கணவன் மங்களதாசன் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்.

அத்துடன் இதுபோன்று கர்ப்பிணித் தாய்மார்கள் முல்லைத்தீவில் இருந்து வவுனியா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட பின் இறந்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version