கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக காத்தான்குடியில் (air rifles) எனும் வாயு துப்பாக்கி விற்பனை காட்சியறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஊர் வீதியில் ஹமீட் ரேடிங் சென்றர் எனும் நிறுவனத்தினால் இந்த வாயு துப்பாக்கி விற்பனை காட்சியறை திறக்கப்பட்டுள்ளது.

விவசாய பண்ணைகளை மிருகங்கள் மற்றும் பறவைகள் சேதப்படுத்தாத வகையில் அந்த மிருகங்கள் மற்றும் பறவைகளை துரத்துவதற்காக விவசாயிகள் இந்த வாயு துப்பாக்கியை பயன் படுத்த முடியும் என இந்த நிறுவன உரிமையாளர் எஸ்.எச்.எம்.சமீம் தெரிவித்தார்.

‘துரத்துங்கள் கொல்லாதீர்கள்’ என்ற வாசகத்துடன் இந்த வாயு துப்பாக்கி பாவிக்கப்படல் வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வாயு துப்பாக்கியை பாவிப்பதற்கும் இதனை விற்பணை செய்வதற்கும் பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அனுமதி வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய செய்கைகள் மற்றும் விவசாய பண்ணைகளை சேதப்படுத்த வரும் மிருகங்கள் மற்றும் கால் நடைகள், பறவைகளை இந்த துப்பாக்கியை பயன் படுத்தி துரத்த முடியுமே தவிர இதனால் அவைகளை சுட்டு கொல்ல முடியாது எனவும் அவர்; குறிப்பிட்டார்.

air-riflesஇந்த வாயு துப்பாக்கி இலங்கையில் 23 விற்பணை நிலையங்களில் விற்பணை செய்யப்படுவதாகவும் கிழக்கு மாகாணத்தில் இதுவே இதன் முதலாவது காட்சியறை எனவும் இதனை பாவிக்கும் ஒருவர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கேற்பவே பாவிக்க முடியும் எனவும் இந்த வாயு துப்பாக்கி 12500 ரூபாவிலிருந்து 50000 ரூபாவரை விற்பணை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வாயு துப்பாக்கியை பெறும் நபர் தனது அடையாள அட்டையின் பிரதியை வழங்குவதுடன் மற்றும் தனது கை விரல் அடையாளம் என்பவற்றுடன் சில ஆவனங்களையும் ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வாயு துப்பாக்கியை பெறும் நபர் தனது அடையாள அட்டையின் பிரதியை வழங்குவதுடன் மற்றும் தனது கை விரல் அடையாளம் என்பவற்றுடன் சில ஆவனங்களையும் ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version