சென்னை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் தனது நடிப்பால் கொடிகட்டிப் பறந்த நவரச நடிகர் கார்த்திக் மீண்டும் பல வருடங்கள் கழித்து, கதையின் நாயகனாகக் களமிறங்குகிறார்.
தனது துள்ளல் மற்றும் காமெடி நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கட்டி போட்டு வைத்திருந்த கார்த்திக், தற்போது மகன் கவுதம் நடிக்க வந்ததைத் தொடர்ந்து குணச்சித்திர நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவரின் நடிப்பில் 1992 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில், மீண்டும் கதாநாயகனாக களத்தில் குதிக்கிறார்.
அமரன் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ராஜேஷ்வரே இந்தப் பாகத்தையும் இயக்குகிறார். அமரன் படத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நடிகை பானுப்பிரியா நடித்திருந்தார்.
Amaran_2_Stills__7_2430975fஇவர்களுடன் இணைந்து சில்க் ஸ்மிதா, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் ராதாரவி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது எடுக்க விருக்கும் அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கின் ஜோடியாக இரண்டு நாயகிகளை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளதாக இயக்குனர் ராஜேஷ்வர் நேற்று நடந்த படத்தின் அறிமுக விழாவில் கூறினார்.
அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் படப்பிடிப்பைத் தொடங்கி அடுத்த வருடம் கோடைவிருந்தாக படத்தைத் திரைக்கு கொண்டுவர நடிகர் கார்த்திக்கும், இயக்குநர் ராஜேஷ்வரும் திட்டமிட்டுள்ளனர்.
மகன் கூட போட்டியா.. கார்த்திக்!?

Share.
Leave A Reply

Exit mobile version