திருச்சி: திருச்சியிலிருந்து குமுளி சென்ற அரசு பேருந்தில் (TN 58 N 1975) நேற்று பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் அடாவடியாக வந்து உட்கார்ந்த போலீஸ் எஸ். ஐ. ஒருவர், அப்பெண்ணிடம் அத்துமீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.

நிலைமை எல்லை மீறிச் செல்லவே, ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், இருக்கையிலிருந்து எழுந்து நின்றபடியே, அருகில் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனரிடம், அந்த எஸ்.ஐ.-யை வேறு இருக்கையில் அமரச் சொல்லுமாறு கேட்கிறார்.

ஆனால் அதனை நடத்துனர் கண்டுகொள்ளவில்லை.

காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக அரங்கேறிய அந்த காட்சியின் வீடியோ இங்கே…

span style=”color: #ff0000;”>

இந்நிலையில் வழியைவிட்டால் தாமே வேறு இருக்கைக்கு சென்றுவிடுவதாக அந்த பெண் கூறியும், ‘ஸ்டாப்பிங் வரட்டும்… நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா?’ என்று கேட்டு தகராறில்  ஈடுபட்ட நிலையில், அருகில் இருந்த மற்ற பயணிகள் ஆவேசமடைந்து, அந்த எஸ்.ஐ-யை தட்டிக்கேட்க தொடங்கவும், ‘நான் செய்தது தப்புதான்…!’ என்று போதையில் தள்ளாடியபடியே கூறுகிறார். போதை போலீஸ்.

விசாரித்ததில் அந்த போதை போலீஸ் திண்டுக்கல் அருகே உள்ள அம்மய நாயக்க நல்லூர் காவல்நிலையத்தில் SSIஆக பணியாற்றி வரும் ரா.லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version