தங்கல்ல நாகுலுகமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் மரத்தில் கயிறைக் கட்டி தூக்கில் தொங்கியுள்ளது அப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்த குறிப்பிட்ட இளைஞன் தன் தந்தையின் கெப் ரக வாகனத்தில் தனது தொழில் நிமித்த கடமைக்கு செல்பவர் எனவும், நேற்றிரவு, மாத்தறை, தங்கல்ல வீதியில் தூக்கில் தொங்கியுள்ளார்.
தங்கல்ல போலீசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்கொலைக்கான காரணத்தை இதுவரை கண்டறியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.