மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனை, அவர்களின் வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் குறித்த நபர் மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பங்களில் அம்மு என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் குறித்த நாய், இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசாங்கு காட்டி வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழமைபோல் சண்டை நடந்த சமயம் குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து, அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது.

படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த நபரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன், கீறல் காயங்களும் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

காயங்களுக்கு 21 தையல்களும் இடப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version