திருப்பதி: ‘மைனா’ படத்தில் கதாநாயகனாக நடித்த விதார்த்- காயத்திரி தேவி திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.

vidarth_news22001ம் ஆண்டிலேயே சினிமாவில் அடியெடுத்துவைத்தவர் விதார்த். மின்னலே படத்தில் துணைநடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து சண்டக்கோழி, கொக்கி, லீ, திருவண்ணாமலை, குருவி, மைனா, ஜன்னல் ஓரம், வீரம், காடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விதார்த்.

இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பரின் மகள் காயத்திரி தேவிக்கும் நிச்சயதார்த்தம் மே 4ஆம் தேதி பழனியில் நடைபெற்றது.

திருமணம் ஜூன் 11ஆம் தேதி (இன்று) திருப்பதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பதியில் இன்று காலை விதார்த்- காயத்திரி தேவி திருமணம் நடைபெற்றது. நடிகர் சங்க செயலாளர் ராதாரவி நேரில் சென்று வாழ்த்தினார்.

Share.
Leave A Reply

Exit mobile version