லண்டன்: அந்த சாலஞ்ச், இந்த .சாலஞ்ச் என்று போய் கடைசியில் வயிற்றில் கேமராவை வைக்க ஆரம்பித்து விட்டனர் இளசுகள்.. அதாவது பெல்லி பட்டன் சாலஞ்ச் என்ற போட்டி இப்போது இன்டர்நெட்டைக் கலக்கி வருகிறது.

முன்பு ஐஸ் பக்கெட் சாலஞ்ச் வந்தது. அதையடுத்து இந்தியாவில் ரைஸ் பக்கெட் சாலஞ்ச்சை கொண்டு வந்தனர். பின்னர் புக் பக்கெட் சாலஞ்ச் வந்தது. இப்படி விதம் விதமாக அறிமுகப்படுத்தி அசத்தினர்.

இந்த நிலையில் தற்போது புதிதாக பெல்லி பட்டன்  (Belly Button Challenge) சாலஞ்ச் வந்துள்ளது. பெல்லி பட்டன் என்றதுமே புரிந்திருக்கும். ஆம், இது தொப்புள் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் சற்று வித்தியாசமானது.

395022-belly-button-challenge-le-nouveau-620x0-2நம்ம ஊரில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடச் சொல்லுவார்கள் அல்லவா. அதையே அப்படியே உல்டா செய்து முதுகுக்குப் பின்னால் கையைக் கொண்டு போய், அதை அப்படியே முன்னால் கொண்டு வந்து தொப்புளைத் தொட வேண்டும். இதுதான் போட்டி.

இந்தப் போட்டிக்கான முக்கிய நோக்கம், உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தானாம். அப்படி இருந்தால் உங்களால் உங்களது தொப்புளைத் தொட முடியும் என்பது இந்தப் போட்டியின் நோக்கமாம்.

சீனாவின் டிவிட்டர் தளமான வெய்போவில்தான் இது முதலில் தென்பட்டது. பின்னர் வைரலாகி இப்போது சீனா முழுவதும் யாரைப் பார்த்தாலும் தொப்புளைத் தொட்டபடி உள்ளனராம்.

பல பெண்களும் இளம்பெண்களும் தொப்புளைத் தொடும் படத்தைப் போட்டு வருகின்றனர். தொப்புளைத் தொட்டார்களோ, இல்லையோ தொப்புளைக் காட்டியபடி படம் போடுவோர் எண்ணிக்கைதான் அதிகம் உள்ளது.

மேலும் #bellybuttonchallenge என்றும் ஹேஷ்டேக் போட்டும் பிரபலமாக்கி விட்டனர்.

இது தற்போது வைரலாகி விட்டது. ஆனால் இது சுத்தப் பைத்தியக்காரத்தனம் இதை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பவும் ஆரம்பித்து விட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version