குவைத் நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சுவாபிர் பிரதேச மஸ்ஜித் ஒன்றில் இன்று ஜும்ஆ தொழுகையின் போது கொடூர தற்கொலை குண்டு தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அல் இமாமுஸ்சாதிக் என்றழைக்கப்படும் மேற்படி மஸ்ஜிதில் ஷீஆ பிரிவைச் சேர்ந்தோரே அதிகம் சென்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேலை தாக்குதல் நடாத்தப்பட்ட பள்ளிவாயளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Kuwait – Moment of Islamic State Suicide Bomber