புளோரிடாவில் தனது பள்ளித்தோழியினை நீதிபதியாக பார்த்த குற்றவாளி உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரியாவின் மியாமியை சேர்ந்த ஆர்த்தூர் பூத்(Arthur Booth- Age 49) என்ற நபர் தொடர் கொள்ளை, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு நடைபெற்ற வழக்கில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது.
இந்த வழக்கை விசாரிக்க நீதிபதியாக வந்த பெண்மணி Glazer என்பவர், இந்த குற்றவாளியின் பள்ளிப்பருவத் தோழியாவார்.
மேலும், பள்ளிப்பருவத்தில் நீங்கள் சிறந்த மாணவராக விளங்கினீர்கள், உங்களுடன் இணைந்து நான் உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளேன்.
இதனைக் கேட்டு ஆர்த்தூர், பதிலளிக்கமுடியாமல் கூண்டில் இருந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதுள்ளார்.
இந்த வழக்கில் ஆர்த்தூருக்கு 43,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.