அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உதா என்ற உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் பிரையானே ஆல்டிஸ்(36).

இவர் தனது பள்ளியில் படிக்கும் 16 மற்றும் 17 வயது மாணவர்களுடன் உறவில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றபோது, இவர் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், ஜாமீனில் வெளிவந்த பின்னரும் இவர் தனது தவறை திருத்திக்கொள்ளாமல், மீண்டும் மாணவர்களுடன் உறவில் ஈடுபட்டதால் இவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவரது வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் ஆல்டிஸ் கதறி அழுதுள்ளார்.

teacher_jail_002

Share.
Leave A Reply

Exit mobile version