jokovich

விம்பிள்டன் டெனிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான இறுதியாட்டத்தில் சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரரை தோற்கடித்தார்.

லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் தொடர் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் உலகின் நம்பர்1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 ஆவது இடத்தில் உள்ள சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மோதினர்.

பரபரப்பான இறுதியாட்டத்தில் ரை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை ஜோகோவிச் 76 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட பெடரர் ரைபிரேக்கர் வரை சென்ற 2 ஆவது செட்டை 76 என தன்வசப்படுத்தி பதிலடிகொடுத்தார்.

மூன்றாவது செட்டில் ஜோகோவிச் 32 என முன்னிலை வகித்தபோது மழை குறுக்கிட ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

மீண்டும் போட்டி தொடங்கியதும் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 3 ஆவது செட்டை 64 என வென்றார்.தொடர்ந்து அசத்திய ஜோகோவிச், 4 ஆவது செட்டை 63 என தனதாக்கினார்.

மூன்றாவது முறை: இரண்டு மணிநேரம் 55 நிமிடம் வரை நீடித்த இறுதியாட்டத்தின் முடிவில் செர்பியாவின் ஜோகோவிச் 76, 67 ,64 ,63 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று விம்பிள்டனில் 3 ஆவது முறையாக (2011.14,15 கிண்ணத்தை கைப்பற்றினார்).

இதுவரை 4 முறை இறுதியாட்டத்திற்கு முன்னேறிய இவர் 2013 இல் மட்டும் தோல்வியடைந்து 2 ஆவது இடம் பிடித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version