எது உண்மை ? எது பொய் எனத் தெரியாமல் அனைத்து தகவல்களும் இணையத்தில் தீயாக பரவும் காலமிது. இந்நிலையில் இங்கிலாந்தில் வானத்திலிருந்து தேவதையொருவர் பூமியில் விழுந்துள்ளதாக இணையத்தில் தீயாக தகவலொன்று பரவி வருகின்றனர்.

asasa copieபலரும் இதனை உண்மையென நம்பி பகிர்ந்து வருகின்றனர். எனினும் அதன் உண்மைத் தகவல்கள் இதோ.. மேற்படி உருவமானது சீனாவைச் சேர்ந்த சுன் யுவான் மற்றும் பெங் யு ஆகிய கலைஞர்களின் கலைப்படைப்பாகும்.


‘ஏஞ்சல்’ அதாவது தேவதை எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படைப்பு பீஜிங் நகரில் வைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கலைஞர்களாக கருதப்படும் அவர்கள் இருவரும் மிகவும் த த் ரூபமான கலைப்படைப்புகளை உருவாக்குவதில் வல்லவர்கள்.

அவர்கள் உயிரிழந்த குழந்தைகள் , மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு ஆகியவற்றையும் தமது கலைப்படைப்புகளில் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள்.

வயதான பெண்ணொருவர்  இறகுகள் அற்ற இறக்கைகள் என காணப்படும் மேற்படி கலைப்படைப்பானது சிலிக்கா ஜெல் , பைபர் கிளாஸ் , துருப்பிடிக்காத இரும்பு ஆகியவற்றைக்  உருவாக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version