Site icon ilakkiyainfo

2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா? -(என்.வித்­தி­யா­தரனின் செவ்வி..)

2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா?

20 ஆச­னங்கள் கிடைக்­கப்­பெற்று 2016 இற்குள் தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வை பெற முடி­யாது விட்டால் பதவி துறப்போம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­விக்கத் தயாரா என ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்­சியின் ஒருங்­கி­ணைப்­பா­ளரும் யாழ். தேர்தல் மாவட்ட தலைமை வேட்­பா­ள­ரு­மான என்.வித்­தி­யா­தரன்

கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி :– விடு­த­லைப்­பு­லி­களின் முன்னாள் போரா­ளி­களை ஒன்­றி­ணைந்த விடயம் குறித்து கூட்­ட­மைப்பின் தலை­வ­ருக்கு கூறயிருந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்­தீர்­களே. ஆனால் அதனை அவர் நிரா­க­ரித்­துள்­ளாரே?

பதில்:– முன்னாள் விடு­தலைப் புலி­களை ஒன்­றி­ணைத்து ஓர் அர­சியல் கட்­ட­மைப்பை உரு­வாக்கும் எமது நட­வ­டிக்கை திடீ­ரென ஆரம்­பிக்­கப்­பட்­ட­தல்ல.

அது ஒரு வரு­டத்­துக்கு முந்­திய முயற்சி. அது குறித்து நான் ஏற்­க­னவே தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளேன். இவ்­வி­டயம் குறித்து அவ்­வப்­போது நான் சம்பந்தனை சந்­திக்கும் போது பல தட­வைகள் அவ­ரிடம் கூறி­யி­ருக்­கின்றேன்.

ஜூலை முதல் வாரத்தில் வவு­னி­யாவில் சம்­பந்தனோடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஏனைய தலைவர்களை நாம் சந்­தித்­த­போது, புலி­களை ஒன்­றி­ணைக்கும் உங்கள் முயற்சி குறித்து நான்கு, ஐந்து மாதங்க­ளுக்கு முன்னர் நீங்கள் குறிப்­பிட்­ட­போது நான் அதனை எதிர்த்­தேனா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். அது வீடியோ ஒளிப்­ப­தி­வா­கவும் செய்­தி­யா­ளர்­க­ளிடம் உள்­ளது.

இந்த முயற்­சியைக் கடந்த வருடம் நான் ஆரம்­பித்­த­போது அது குறித்து அப்­போ­தி­ருந்த பாது­காப்பு செய­லாளர் கோட்­டா­பய ராஜ­ப­க் ஷ­வினால் நேர­டி­யாக அழைத்து விசா­ரிக்­கப்­பட்டேன்.

அந்த சந்­திப்பு நடந்து சில தினங்­க­ளுக்கு உள்­ளேயே சம்­பந்னைச் சந்­தித்து அது பற்­றிய தக­வலைக் கூறியிருந்தேன்.

கோட்­டா­ப­ய­வு­ட­னான சந்­திப்பின் முடிவில் நான் அவ­ரிடம் ஒரு கேள்வி எழுப்­பினேன். ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்கு உங்கள் தரப்புத் தயா­ராகி வரு­வ­தாக அறி­கிறோம்.

அத்­தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் என்ன நடக்கும்…? என்று கேட்டேன். அவர் அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார்.

அப்­படி நடந்தால்… அதன் பின் குழப்பம் அல்­லவா…? என்றார். இந்த விட­யத்­தையும் நான் அப்­ப­டியே சம்­பந்தனிடம் கூறினேன். அப்­ப­டியா என்று குறிப்­பிட்டு, கோட்­டா­ப­யவின் பதிலை இரண்டாம் தட­வையும் என்­னிடம் சம்­பந்தன் கேட்டுத் தெரிந்­து­கொண்டார்.

ஆகவே, முன்னாள் புலி­களை ஒன்­றி­ணைத்து நாங்கள் ஒரு கட்சி தொடங்­கு­கின்­றமை பற்றி தமக்கு எதுவும் முன்னர் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று சம்­பந்தன் கூற மாட்டார் என நம்­பு­கிறேன்.

மாவை, சுமந்­தி­ர­னுக்கும் கூட அவ்­வப்­போது இது குறித்துக் கூறி வந்­தி­ருக்­கிறேன். விடு­தலைப் புலி­களை தமிழ்க் கூட்­ட­மைப்­புக்குள் உள்­வாங்­கு­வது அவ­சி­யமே என்று சாரப்­ப­டவே சுமந்­திரன் எப்­போதும் கருத்து வெளியிட்டு வந்தார்.

எனினும் வவு­னி­யாவில் தமிழ்க் கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்­களை நாம் சந்­தித்­த­போது அங்கு சுமந்­திரன் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­காமை துர­திர்ஷ்­டமே.

கேள்வி:- 2016இற்குள் தீர்வை எட்­டு­வ­தற்கு கூட்­ட­மைப்­புக்கு ஒன்று­பட்டு வாக்­க­ளிக்­கு­மாறு கோரி­யுள்­ள­னரே?

பதில்:- இரு­பது ஆச­னங்­களைத் தந்தால் 2016 இல் தீர்வு என்று மந்­தி­ரத்தில் மாங்காய் பறிக்கும் கதை பேசு­கிறார் சம்­பந்தன். ஆனால் இந்தக் கருத்தை சுமந்­தி­ரனோ, மாவையோ அல்­லது கூட்­ட­மைப்பின் ஏனைய தலை­வர்­களோ வழி­மொ­ழிந்து கூற­வில்லை.

அவ்­வி­டயம் குறித்து அவர்கள் மௌனமே சாதிக்­கி­றார்கள். அதற்குக் காரணம் உண்டு. இன்னும் ஒன்­றேகால் வரு­டத்­துக்குள் 2016 முடிந்து விடும். தென்­னி­லங்கை அர­சியல் பிள­வுண்டு நிற்கும் இந்தச் சூழ்­நி­லையில் 2016 இற்குள் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற சம்­பந்தனின் சூளுரை வெறும் வாய்ச்­ச­வா­டலே.

இன்­னொரு தடவை பொதுத் தேர்­தலை சந்­திக்க வேண்­டிய தேவையோ, வாய்ப்போ, கட்­டா­யமோ தனக்கு வராது என வயதில் மூத்த சம்­பந்தன் கரு­தலாம்.

ஆனால் தங்­க­ளுக்கு அந்தக் கட்­டாயம் உள்­ளது என்­பது ஏனைய கூட்­ட­மைப்புத் தலை­வர்­க­ளுக்கு நன்கு தெரியும். எனவே சம்­பந்தனின் சூளு­ரையை வழி­மொ­ழிந்தால் ஒன்­றேகால் ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் தாங்கள் முக்­காடு போட்டுக் கொண்­டுதான் மக்கள் முன்­செல்ல வேண்­டி­யி­ருக்கும் என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டதன் பின்னர் வட­கி­ழக்கில் அதி­க­மான பிரதி­நி­தித்­து­வங்­களை பெற்­றுக்­கொண்டு வரு­கின்ற நிலையில் நீங்கள் எந்த அடிப்­ப­டையில் இவ்­வாறு கூறு­கின்­றீர்கள்?

பதில்:- 1977 இல் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக வந்த அமிர்­த­லிங்கம், யாழ்ப்­பா­ணத்தில் ஒரு மே தினக் கூட்­டத்தில் பேசும்­போது அடுத்த மே தினம் தமி­ழீ­ழத்தில் என்று அறி­வித்து தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு உசுப்­பேத்­தினார்.

இப்­போது சம்­பந்தன் தமது வழ­மை­யான வாக்குச் சுரண்­ட­லுக்கு அதே பாணியில் 2016 இறு­திக்குள் தீர்வு என்று உசுப்­பேத்­து­கிறார். அவ்­வ­ளவே.

தீர்வைப் பெறு­வ­தற்கு மூன்றே மூன்று வழி­கள்தாம் உள்­ளன. ஒன்று, தென்­னி­லங்கை தானாகப் பார்த்துத் தரு­வது. அது நடக்­கவே நடக்­காது. இரண்­டா­வது, நாமாகப் பிடுங்கி எடுப்­பது.

அது 2009 மேயுடன் சாத்­தி­ய­மற்­ற­தாகி விட்­டது. மூன்­றா­வது – சர்­வ­தேசம் பெற்றுத் தரு­வது. 2009 இல் தமிழர்களுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய பேர­வலம் நடந்­த­போது வாய் திற­வாத சர்­வ­தேசம் தரும் என்று காத்­தி­ருப்­பது முட்­டாள்­த­ன­மா­னது.

அந்த முட்­டாள்­தன விட­யத்­தில்தான் முழு­தாகத் தங்­கி­யி­ருக்­கின்­றது கூட்­ட­மைப்பு. அது சரி­வரும் என்று காத்­தி­ருப்­பது இலவு காத்த கிளியின் கதை­யாகி விடலாம்.

ஆகவே நான் அவ­ருக்கு ஒரு சவால் விடு­கிறேன். 2016 டிசெம்பர் 31 ஆம் திக­திக்குள் தமி­ழர்­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரா­விட்டால் எங்கள் தரப்பில் பாரா­மன்­றத்­துக்குத் தெரிவு செய்­யப்­படும் உறுப்­பி­னர்கள் எல்லாம் 2017 ஜன­வரி முதலாம் திகதி எங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்து, அந்தப் பத­வி­களை வறி­தாக்­கி­விட்டுச் செல்வோம் என்று பகி­ரங்­க­மாக இப்­போதே அவரால் அறி­விக்க முடி­யுமா?

கேள்வி:- அப்­ப­டி­யானால் நிரந்­தர அர­சியல் தீர்வை எங்­ஙனம் பெறு­வது?

பதில்:- இந்த மூன்று விட­யங்­க­ளையும் ஒருங்­கி­ணைந்த மார்க்கம் உண்டு. அது அஹிம்சை வழியில், எம்மை வருத்தி, ஈகம் செய்து, உச்ச பட்ச தியாகம் புரிந்து – தென்­னி­லங்­கையை திசை திருப்­பு­வது, தென்­னி­லங்­கை­யி­ட­மி­ருந்து அஹிம்சை ஆயு­தத்தால் பிடுங்­கு­வது, சர்­வ­தே­சத்தின் பார்­வை­­யையும் கருத்­தையும் எமது அழுத்தம் மூலம் எமது பக்கம் விழ வைப்­பது.

அதைச் செய்­வ­தற்கு காந்­திகள், நெல்சன் மண்­டே­லாக்கள், மார்ட்டின் லூதர் கிங்­குகள் தேவை. அவர்கள் எல்­லோ­ருமே எமது போரா­ளிகள் மத்­தி­யி­லேயே தாரா­ள­மா­கவே பொதிந்து கிடக்­கி­றார்கள்.

காந்தி தேசத்­துக்கே காந்­தீயம் போதித்த தியாகி திலீ­ப­னா­கட்டும், அன்னை பூப­தி­யா­கட்டும் எமது இயக்கத் தரப்புக­ளிடம் இருந்­துதான் வந்­தார்கள்.

நெல்சன் மண்­டேலா போல பல பத்­தாண்­டுகள் சிறை இருந்த செம்­மல்கள் எங்கள் போரா­ளிகள் மத்­தி­யி­லேயே உள்­ளனர்.

மார்ட்டின் லூதர் கிங் போல தமது கொள்­கைக்­காக தங்கள் உதி­ரத்­தையும் அர்ப்­ப­ணிக்கத் தயா­ரா­ன­வர்கள் நமது போரா­ளி­க­ளி­டையே நிறை­யவே உள்­ளனர்.

ஆகவே எங்கள் உரி­மைக்­கான, தீர்­வுக்­கான, விடு­த­லைக்­கான அஹிம்சைப் போராட்­டத்­தையும் அதிர்­வுள்ள வகையில் முன்­னெ­டுக்கும் நம்­பிக்கைக் கீற்று ஜன­நா­யகப் போரா­ளிகள் மத்­தி­யி­லி­ருந்து தான் வர முடியும் என்­பதே இன்­றைய அர­சியல் யதார்த்தம். அதனைத் தமி­ழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- தாங்கள் சார்ந்­துள்ள அமைப்­பினர் தேர்­தலில் களமிறக்கப்பட்டமைக்கு பல்வேறு பின்னணிகள் கூறப்படுகின்றனவே?

பதில்:- நாங்கள் ராஜபக் ஷவின் வழிநடத்தலில் இயங்கும் புலனாய்வாளர்களினால் களத்தில் இறக்கப்பட்டவர்கள் என்கிறார் கூட்டமைப்பின் தலைவர்.

கூட்டமைப்பை உடைப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவினால் அனுப்பப்பட்டவர்கள் என்-கிறார் முன்னாள் எம்.பி. சிறீதரன். வேறு சில கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எம்மை இந்தி-யாவின் ஆட்கள், இந்திய புலனாய்வு அமை-ப்பான றோ வின் கைக்கூலிகள் என்று கதை பரப்பு-கின்றனர்.

மக்கள் மத்தியில் முன்னாள் போராளிகளுக்கு இருக்கும் அபிமானத்தை, ஆத-ரவை, முறியடிப்பதற்கு இயலாமல் திணறும் எதிர-ணியினர் நட-த்தும் விஷமத்தனமான, ஆதாரம் ஏது-மற்ற பொய்ப் பிரசாரமே இது.

Exit mobile version