பிர்த்தானியாவில் முதியவர்கள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் அங்குள்ள முதியவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் டெவொனில் உள்ள தோர்குவே பகுதியில் முதியவர்கள் காப்பகம் உள்ளது. இந்நிலையில் அங்கு வேலை செய்துவந்த கிரிஸ்டினா செதி (Christina Sethi) என்ற பெண் அங்கு சேர்க்கப்பட்டிருந்த 80 வயது ஆண் மற்றும் பெண்ணிடம் உடலுறவு வைத்திருந்துள்ளார்.
மேலும் 101 வயது பெண்மணி ஒருவருக்கும் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மூளை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளியில் சொல்ல முடியாமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.