சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும், இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது.

வடக்கு கிழக்கில் பரவலாக வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் எனினும், மந்தகதியிலேயே காலையில் வாக்களிப்பு இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இடம்பெற்றுள்ள வாக்களிப்பு வீதம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

சம்பந்தன் திருமலையில் வாக்களிப்பு

023

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் தனது வாக்கை அளித்துள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈசரவணபவன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமது வாக்குகளை அளித்துள்ளனர்.

அதேவேளை, சிறிலங்காவின் தென்பகுதியில் பல இடங்களில் விறுவிறுப்பாக வாக்களிப்பு இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய முன்னணி முக்கியஸ்தர்கள் வாக்களிப்பு

தமிழ் தேசிய முன்னணி வேட்பாளர்கள் தத்தமது தொகுதிகளில் தமது வாக்குகளை இன்று காலை அளித்தனர். காலை வேலை வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும் பிற்பகல் வாக்களிப்பு சகல இடங்களிலும் சூடுபிடித்திருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version