பிரித்தானியாவில் நடைபெற்ற ஷோர்ஹேம் விமான சாகச நிகழ்வில் எதிர்பாராத விதமாக பைட்டர் ஜெட் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

பிரித்தானியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சசெக்ஸ் கவுண்டியில் ஷோர்ஹேம் ஏர்ஷோ எனும் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக 1950-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பைட்டர் ஜெட் விமானம் வானில் சீறிப்பாய்ந்து சாகசம் செய்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென அந்த விமானம் நிலைதடுமாறியது. சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து தீபிடித்து எரிந்தது.

இதில் 7 பேர் பலியானதாகவும், 14 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக தப்பிய விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சாகச நிகழ்வில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற சாகச நிகழ்வின்போது இரண்டாவது உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

PLANE_05_3415777k

Share.
Leave A Reply

Exit mobile version