சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் படத்தின் 3 கதாநாயகிகளும் அட்டகாசமான உடை அணிந்து வந்திருந்தனர்.ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சும் வகையிலான உடை அணிந்து வந்திருந்தனர். அதில் குறிப்பாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி தான் போட்டிப்போடும் வகையிலான உடை அணிந்து வந்திருந்தனர்.அதுமட்டுமின்றி, இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை ஸ்ரீதேவி அவர்களும் அழகாக புடவை அணிந்து வந்திருந்தார்.

மேலும் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார். இங்கு ‘புலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா போன்றோர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும், அங்கு எடுக்கப்பட்ட சில போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

04-1438681561-1-shruti-hassan-puli-audio-launch

ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் ரிம்பிள் மற்றும் ஹார்ப்ரீத் நருலா டிசைன் செய்த மின்னும் லெஹெங்கா அணிந்து கவர்ச்சியாக வந்திருந்தார்.
ஸ்ருதி ஸ்டைல்
இந்த லெஹெங்காவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் அழகாக நெற்றிச்சுட்டி, நீளமான காதணிகளை அணிந்து, பொருத்தமான மேக்கப்புடன் அழகாக வந்திருந்தார்.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா டிசைனர் நிவேதிதா சபூவின் ஃபியூசன் புடவை அணிந்து வந்திருந்தார். அதிலும் இவர் அடர் ப்ரௌன் நிற லெஹெங்கா புடவை அணிந்து, எம்பிராய்டரி மற்றும் ஜர்தோஷி வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.
ஹன்சிகா ஸ்டைல்
ஹன்சிகா இந்த லெஹெங்கா புடவைக்கு ஏற்றவாறு பெரிய காதணி, பிரேஸ்லெட் அணிந்து, போனிடைல் போட்டு, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மேற்கொண்டு வந்திருந்தார்.
நந்திதா ஸ்வேதா
நடிகை நந்திதா ஸ்வேதா லேஸ் நெக்லைன் கொண்ட நீல நிற கவுனில் வந்திருந்தார்.
நந்திதா மேக்கப்
நந்திதா இந்த உடைக்கு ஸ்மோக்கி மேக்கப் மேற்கொண்டு, கொண்டை போட்டு, கை மற்றும் காதுகளுக்கு வெள்ளை நிற ஆபரணங்கள் அணிந்து வந்திருந்தார்.
ஸ்ரீதேவி
‘புலி’ படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி, மனீஷ் மல்ஹொத்ராவின் ப்ளைன் மெரூன் நிற புடவையில், பொருத்தமான மேக்கப்புடன் வந்திருந்தார்.

மனைவியுடன் விஜய்
இது தன் மனைவி சங்கீதாவின் அருகில் நடிகர் விஜய் அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

Share.
Leave A Reply

Exit mobile version