அந்த இணையதளம் அண்மையில் ஹேக் செய்யப்பட்டது. மேலும் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவோரில் முதலிடம் டெல்லிகாரர்களுக்கும், இரண்டாவது இடம் மும்பைக்காரர்களுக்கும், மூன்றாவது இடம் சென்னைவாசிகளுக்கும் கிடைத்துள்ளது.
அந்த இணையதளத்தில் எத்தனை இந்தியர்கள் பணம் கட்டி கள்ளக்காதல் செய்துள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
ஆஷ்லி மேடிசன் இணையதளத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை 5 ஆயிரத்து 236 இந்தியர்கள் பணம் செலுத்தி கள்ளக்காதல் செய்துள்ளனர். அவர்கள் செலுத்திய தொகை ரூ.2.4 கோடி ஆகும்.
2008ம் ஆண்டில் இந்தியாவில் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தில் ரூ.198 பணம் செலுத்தியுள்ளனர். இந்த தொகை 2009ல் ரூ.958 ஆக அதிகரித்துள்ளது.
2010ம் ஆண்டில் ஆஷ்லி மேடிசன் இணையதளம் மூலம் கள்ளக்காதல் வைத்துக் கொள்ள ரூ.2 ஆயிரத்து 957 செலுத்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டில் ரூ. 4 ஆயிரத்து 795 கட்டணமாகவும், 2012ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 297 கட்டணமாகவும் செலுத்தப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டில் ரூ. 10 லட்சத்து 64 ஆயிரத்து 688 கட்டணமாகவும், 2014ம் ஆண்டில் ரூ.1 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரத்து 870ம், 2015ம் ஆண்டில் ரூ.72 லட்சத்து 98 ஆயிரத்து 610 கட்டணமாகவும் செலுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்காதல் வெப்சைட்டை பயன்படுத்துவோர்.. சென்னையில்தான் திருட்டுப் பூனைகள் அதிகமாம்!
29-08-22015
சென்னை: கணவன் அல்லது மனைவிக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள உதவும் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் சென்னைவாசிகள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ஆஷ்லி மேடிசன் என்ற இணையதளம் மூலம் திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் யாருடனாவது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் அந்த இணையதளம் அண்மையில் ஹேக் செய்யப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான டெக்னிலாஜிகா ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை நகரம் வாரியாக வெளியிட்டுள்ளது.
டெல்லி
இந்தியாவில் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் டெல்லிவாசிகள் முதல் இடத்தில் உள்ளனர். டெல்லியில் 38 ஆயிரத்து 620 பேர் அந்த இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
மும்பை
டெல்லிக்காரர்களுக்கு அடுத்தபடியாக வாழ்க்கை துணையை ஏமாற்றுபவர்கள் மும்பைவாசிகள். மும்பையில் வசிப்போரில் 32 ஆயிரத்து 888 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள்.
சென்னை
ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பெயர்போன தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் வசிப்பவர்கள் மும்பைக்காரர்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வாழ்க்கைத் துணையை ஏமாற்றுகிறார்கள். சென்னைவாசிகளில் 16 ஆயிரத்து 355 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
பெங்களூர்
கசமுசாக்களா பெங்களூரில் நிறைய நடக்குமப்பா என்ற பேச்சு உள்ளது. ஆனால் அத்தகைய பெங்களூரில் வசிக்கும் 88 பேர் மட்டும் தான் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத்
ஹைதராபாத்காரர்கள்(12,548) அந்த பட்டியலில் 5வது இடத்திலும், கொல்கத்தாகாரர்கள்(11,751) 6வது இடத்திலும், புனேகாரர்கள்(9,738) 7வது இடத்திலும் உள்ளனர்.