சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை பிடித்து வைத்துக்கொண்டு அட்டூழிய வெறியாட்டம் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதக் குழுவுக்கு பெண்களை பிடித்துத்தரும் ஏஜெண்ட்டாக செயலாற்றி வந்த இளம்பெண்ணை கைது செய்த ஸ்பெயின் நாட்டு போலீசார், அவருக்கு கைவிலங்கிட்டு வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, அந்த இளம்பெண் வசித்துவரும் வீட்டை நேற்று போலீசார் சுற்றி வளைத்தனர். அவரை கைது செய்து, கை விலங்கிட்டு வீதிகளின் வழியாக போலீசார் அழைத்துச் சென்றனர்.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ஆவணங்களை உடன் சென்ற இரு போலீசார் சில அட்டைப் பெட்டிகளில் கொண்டு சென்றனர்.
கைதான இந்தப் பெண்ணும் விரைவில் சிரியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.