காமத்தின் சின்னம் தராசு !
மனிதர்களுக்கும் சரி மற்ற உயிரினங்களுக்கும் சரி இறைவனால் கொடுக்கப்பட்ட காம உணர்வு என்பது மிகவும் முக்கியமானது குறிப்பாக காம உணர்ச்சியின் தராதரத்தை பொறுத்தே ஒரு மனிதனின் கெளவரம் அமைகிறது.
காமம் என்பது ஒரு மனிதனுக்கு அதிகமாகும் போது அவனது உடல்நலம் பாதிப்படைகிறது. மனமோ கொந்தளிப்பான நிலையை அடைகிறது.
அந்த நேரத்தில் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தாலும் வீரனாக இருந்தாலும் தடுமாற்றத்தை அடைகிறான்.
அதே நேரம் காமம் கட்டுக்குள் இருந்தால் அதாவது எல்லை மீறாமல் நெரிபடுத்தபட்டு இருந்தால் எவ்வளவு இக்கட்டான நிலையிலும் சமாளித்து ஒருவன் முன்னுக்கு வந்துவிடுவான்.
களத்திரஸ்தானமான துலாம் ராசியின் சின்னம் துலாக்கோல் அல்லது தராசு ஆகும்.
தராசின் இரு முனைகளிலும் இரண்டு தட்டுகளால் ஆனது அதே போலவே ஆண்களின் மர்ம உறுப்பும் காட்சி தருகிறது.
காம உணர்சிகள் அதிகமாகும் போது உடல் உறுப்புகள் சாய்ந்து விடுகிறது. அதாவது கீழ் நிலைக்கு வந்து விடுகிறது.
எந்த புறமும் சாயாமல் சரியாக இருப்பதே தராசின் இலட்சணமாகும். காம எண்ணமும் மிகுதி அடையாமலும் தகுதி குறையாமலும் சமமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது வாழ்வின் சிறந்த லட்சணமாக கருதப்படும். சுருங்க சொல்வது என்றால் காம உணர்வு சமமாக இருக்க வேண்டும்.
ஏழாவது ராசியான துலாத்தின் அதிபதி சுக்கிரன் இவரை அசுர குரு என்றும் ஜோதிட நூல்கள் சொல்கின்றன குருவாக இருப்பவர் சிஷ்யர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். அவர்கள் நல்லதை செய்யும் போது பாராட்டி பக்க துணையாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் அசுர குருவான சுக்கிராட்சாரியார் தனது நல்ல மாணவன் மாவலி தானம் வழங்கும் போது வண்டு வடிவம் எடுத்து கெண்டியிலிருந்து நீர்வராமல் தடுத்தார் இதனால் தனது ஒற்றை கண்ணையும் இழந்தார்.
காமம் கூட அப்படி தான் சாதகத்தை மட்டும் பார்க்கும் ஒரே ஒரு கண்தான் அதற்கு உண்டு பாதகத்தை காட்டும் கண் அதற்கு இல்லை உலகத்தையே வளர்ச்சி பாதைக்கு ஜனசமூக விருத்திக்கு அழைத்து செல்லும் உயரிய உணர்வாக இருந்தாலும் சில்லறை தனமான அடிமை உணர்ச்சிக்கு மனிதனை ஆட்படுத்தி நற்செயல்களை தடுத்து விடும்.
எனவே சுக்கிரனை போல் நல்லதை தடுக்காமலும் கீழ்த்தரமான புலனுணற்சிகளுக்கு ஆட்படுத்தமலும் காமம் சமமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தராசு என்ற சின்னம் துலாம் ராசிக்கு தரப்பட்டு இருக்கிறது.