மினுவாங்கொடை – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 5 உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து, நிக்கவரட்டிய நோக்கி பயணித்த ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஏற்றிய ஜீப் வண்டி மினுவாங்கொட – மிரிஸ்வத்த பகுதியில் நேரெதிராக வந்த பஸ் உடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பிலான CCTV Footage கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்து – 4 அதிகாரிகள் பலி- (வீடியோ)

accidentமினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நால்வரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மரண வீடு ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த நால்வரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பஸ்கள் இரண்டும் டிபென்டர் வாகனமும் மோதி இன்று காலை இவ்விபத்து ஏற்பட்டது.

பஸ் ஒன்றை டிபென்டர் முந்திச் செல்ல முற்பட்ட வேளை, இரண்டு பஸ்களும் டிபென்டர் மீது மோதியதாகவும் இதில் டிபென்டர் கடுமையான சேதத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது டிபென்டரில் பயணித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் அந்த இடத்திலேயே பலியானதாகவும் ஏனைய இருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பஸ்ஸில் பயணித்த ஐவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version