மனைவியின் நிர்வாணப் புகைப்படத்தை பெங்களூரு நகர் முழுவதும் ஒட்டிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் ஒரு நடுத்தர வயது பெண்ணின் நிர்வாண புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.
நகர் முழுவதும் ஒட்டியிருந்த நிர்வாணப் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த மனைவியின் உறவினர்கள், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பங்கர்பெத் என்ற பகுதியில் வசித்து வருபவர் வெங்கடப்பா. இவருக்கு இரண்டு மனைவிகள்.
முதல் மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வருவது வாடிக்கை.
ஒரு நாள் இவரது மூத்த மனைவி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பொதுமக்கள் முன்னிலையில் வெங்கடப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்நிலையில் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்திய மனைவியை பழி வாங்க நினைத்த வெங்கடப்பா, தன் மனைவியுடன் சுமூகமாக இருந்த காலத்தில் எடுத்த மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பெங்களூர் நகர் முழுவதும் ஒட்டியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வெங்கடப்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டிய கணவனாகவே இருந்தாலும் ஒரு அளவிற்கு மேல் அந்தரங்கமாக புகைப்படம் எடுக்க விடக்கூடாது என்று பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் பொலிஸார்.