வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் தேரோட்டத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 8ம் திகதி செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.

மஹோற்சவ பிரதம குரு பிரம்மஸ்ரீ.சுந்தர செந்தில் ராஜக் குருக்கள் தலைமையில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று பஞ்சகமுக விநாயகர் தேரில் அமர்ந்து அடியார்கள் வடம்பிடிக்க இறைவன் கிராமத்தினூடாக வருகை தந்தார். இதன்போது நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டத் திருவிழாவானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலய வீதி, சேர்மன் கனகரெத்தினம் வீதி, பிரதான வீதி, விபுலானந்த வீதி, புதுக்குடியிருப்பு பகுதி, விபுலானந்தா வீதி, கல்குடா வீதி வழியாக சென்று ஆலயத்தை சென்றடையவுள்ளது.

தேரோட்டம் நிறைவுற்றதும் ஆலயத்தில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

unnamed-1419

Share.
Leave A Reply

Exit mobile version