வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில்  சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பௌத்த பிக்கு ஒருவர் செட்டிகுளம் பொலிஸாரால்    கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் உள்ள ரங்காத்கம ரஜகம விகாரைக்கு சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனை அவ் விகாரை மதகுரு துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தாக குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த விகாரையின் விகாராதிபதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, பாதிப்படைந்த சிறுவன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிரிபோபுர பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி ( காணொளி இணைப்பு)

1442762887_7197836_hirunews_Hambanothota-katha

ஹம்பாந்தோட்டை , சிரிபோபுர பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அறைகளை வாடகைக்கு விடும் பெயரில் சூட்சுமமான முறையில் விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பெண்ணொருவர் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version