“சுப்பர் சரக்கு, சுப்பர் ஐட்டம்”  எனக் கூறியதால்.. “தம்பதிகள், இளைஞர்களிடையே மோதல்”: தம்பதிகள் படுகாய்ம்!!

யாழ்ப்­பாணம் மணிக்­கூட்டு கோபுரம் வீதி­யைச்­சேர்ந்த புது­ம­ணத்­தம்­ப­தியர் இருவர் நேற்று முன்­தினம் இரவு இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் தாக்­கப்­பட்டு யாழ்ப்­பாண வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

யாழ். இந்து ஆரம்­பப்­பா­ட­சாலை ஆசி­ரி­யை­யான தர்­சினி (வயது 41) தனியார் கல்­லூரி ஒன்றின் ஆசி­ரி­ய­ரான மாதவ மணி­வண்ணன் (வயது 44) ஆகிய இரு­வ­ருமே இவ்­வாறு இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் தாக்­கப்­பட்­டுள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்று முன்­தினம் இரவு 10.30 மணி­ய­ளவில் இவர்கள் இரு­வரும் தேநீர் அருந்­து­வ­தற்­காக யாழ். பஸ் நிலைய கடை­யொன்­றிற்குச் சென்­றுள்­ளனர்.

அப்­போது அங்­கி­ருந்த இனந்­தெ­ரி­யாத மூன்றுபேர்   மணப்பெண்ணை பார்த்து   “சுப்பர் சரக்கு, சுப்பர் ஐட்டம்”  என கூறி  தகாத வார்த்­தை­களால் கேலி செய்­துள்­ளனர்.

அவர்­களின் தகாத வார்த்தைப் பிர­யோ­கங்­களை சகித்துக் கொள்ள முடி­யாமல் மாதவ மணி­வண்­ணனும் அவர்­களை எதிர்த்துப் பேசி­யுள்ளார்.

பின்னர் நிலைமை மோச­ம­டை­வதை உணர்ந்த தர்­சினி பொலிஸ் அவ­சர அழைப்­பான 119க்கு அழைப்பை ஏற்­ப­டுத்தி விட­யத்தைக் கூறி­யுள்ளார்.

என்­றாலும் ஒரு மணித்­தி­யா­ல­மா­கியும் பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு வருகை தரா­மையால் தர்­சினி தனது சகோ­த­ர­னுக்கு விட­யத்தைச் சொல்லி சம்­பவ இடத்­திற்கு வரும்­படி கோரியுள்ளார்.

உடன் சம்­பவ இடத்­திற்கு வந்த சகோ­தரன் அவர்­களை வீட்­டுக்கு அழைத்துச் சென்­றுள்ளார். இதன் போது திடீ­ரென பின்­தொ­டர்ந்து வந்த சந்­தேக நபர்கள் அவர்­களை தாறு­மா­றாகத் தாக்கியுள்ளனர்.

அத்­துடன் தாக்­குதல் நடத்­து­ப­வர்­களை மறைப்­ப­தாகக் கூறி மேலும் சிலர் சந்­தேக நபர்­க­ளுடன் இணைந்து தாக்­கி­விட்டு ஓடி­யுள்­ளனர்.

தாக்­கப்­பட்­ட­வர்­களை அருகில் இருந்த முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிக் கொண்டு வைத்­தி­ய­சா­லைக்குச் செல்லும் போது பொலிஸார் அந்த இடத்­திற்கு வந்­தனர். காய­ம­டைந்­த­வர்களை வைத்திய­சா­லையில் அனு­ம­திக்­கு­மாறு கூறி­யுள்­ளனர்.

மாதவ மணி­வண்ணன் தலையில் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்டு ஒரு கை முறி­வ­டைந்த நிலையில் அதி­தீ­விர சிகிச்­சைப்­பி­ரிவில் சிகிச்சை பெற்று வரு­வ­துடன் அவ­ரது மனை­வி­யான தர்­சினி காயங்­க­ளுடன் தொடர்ந்து யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் இருவரும் திருமணம் முடித்து ஒரு வாரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version