சென்னை: ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் ஏமி ஜாக்சன் நடிக்க உள்ளதை நினைத்து பல நடிகைகள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்களாம்.
வெற்றிகரமான இயக்குனராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் ஏங்குகிறார்கள்.

ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட்டால் அது பெரிய பாக்கியம் என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் ஏமி ஜாக்சனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

13-1444739035-amy-jackson-600

எந்திரன் 2

ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எந்திரன் 2 படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு பல திசையிலும் ஹீரோயின் தேடியவர் இறுதியில் ஏமி ஜாக்சனை தேர்வு செய்துள்ளாராம்.

ஷங்கர் தான் இயக்கிய ஐ படத்தில் ஏமியை நடிக்க வைத்தார். படத்தில் ஏமியின் நடிப்பை விட அவர் கவர்ச்சியில் காட்டிய தாராளத்தை பற்றி தான் ரசிகர்கள் அதிகம் பேசினர்.

அதிர்ஷ்டம்
நாம் எல்லாம் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று காத்திருக்கையில் இந்த ஏமி மறுபடியும் அவர் படத்தில் அதுவும் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடிக்கிறாரே. அவருக்கு உடம்பெல்லாம் மச்சம் தான் என்று பிற நடிகைகள் பேசிக் கொள்கிறார்களாம்.

ஐஸ்வர்யா ராய்

முன்னதாக ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ், எந்திரன் என ஷங்கரின் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்தார். அதே போன்று மனீஷா கொய்ராலாவும் முதல்வன், இந்தியன் என ஷங்கரின் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

பிரேம் ரத்தன் தான் பயோ பாடல் வீடியோ!

 

Share.
Leave A Reply

Exit mobile version