2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினமான வாழ்கையை வாழ்ந்து வந்ததுடன்,யுவதியும் வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்வை நடத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த யுவதி தாய்லாந்தில் நடைபெற்ற பிரபலமான அழகுராணி போட்டியில் கலந்து கொண்டு அதில் அவர் முதலிடத்தை பெற்று அழகுராணியாக தெரிவானார்.
அழகுராணியாக தெரிவான குறித்த யுவதி மிகவும் சிறிய வசதிவாய்ப்பற்ற வீட்டில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தனது தன்னம்பிக்கை மற்றும் தைரியம் என்பவற்றுடன் பல நூறு போட்டியாளர்களுக்கு மத்தியில் தன்னை இனம்காட்டியிருக்கிறார் இப்பெண்.