வெள்­ளைவான் கடத்­தல்­க­ளுடன் தொடர்பு கிடை­யாது. அத்­துடன், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்­தி­யுள்ள கடத்தல் மற் றும் ஏனைய குற்­றச்­சாட்­டுக்­களில் எவ்­வித உண்­மையும் கிடை­யாது என்று முன்னாள் பாது­காப் புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் சமா­தான செய­லகப் பணிப்­பாளர் எஸ்.புலித்­தே­வ­னு டன் தாம் எவ்­வித தொடர்புக­ளையும் பேண­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

எனக்கு எதி­ராக குற்றம் சுமத்­து­ப­வர்கள் முன்­னுக்குப் பின் முர­ணான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

புலித்­தேவன் மட்­டு­மன்றி பிர­பா­கரன் கூட சர­ண­டைந்­தி­ருந்தால் மீட்டு புனர்­வாழ்வு அளித்­தி­ருப்போம்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைப்­பே­ர­வையின் விசா­ரணை அறிக்கை ஒரு பக்கச் சார்­பா­னது. படை­யினர் மீது எவ்­வித குற்­றச்­சாட்­டுக்­களும் சுமத்­தப்­ப­ட­வில்லை .

புலம்­பெயர் தமிழ் சமூ­கமே யுத்த வெற்­றி­யினால் அதி­ருப்தி கொண்­டுள்­ளது . ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யமை ஓர் பிழை­யான செயலாகும், இதன் ஊடாக நாடு சிக்­கல்­களை எதிர்­நோக்க நேரிடும்.

அண்­மையில் இலங்­கைக்கு ஜப்பான் வழக்­கு­ரைஞர் ஒருவர் விஜயம் செய்­தி­ருந்தார். உள்­நாட்டு நீதவான்கள்விசா­ர­ணை­களில் பங்­கேற்க மறுத்தால் சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றைமை ஒன்று உரு­வாகக் கூடிய சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது.

இறுதிக் கட்ட யுத்­தத்தின் போதான பொது மக்கள் உயிர்ச் சேத விப­ரங்கள் தொடர்பில் அப்­போ­தைய அர­சாங்கம் வழங்­கிய புள்ளி விபரத் தக­வல்கள் மற்றும் பர­ண­கம அறிக்கை ஆகி­ய­ன­வற்றை சர்­வ­தேச சமூகம் நிராகரித்துள்­ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப் பகு­தியில் 5000 படை­யினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 25000 த்திற்கும் மேற்­பட்­ட­வர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை ரத்து செய்­வது அல்­லது புதிய சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதும் குறித்து தற்போ­தைய அர­சாங்­கமே தீர்­மா­னிக்க வேண்டும்.

யுத்த நிறைவின் போது 5000 பேர் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். நான் பத­வியை விட்டு ஓய்வு பெற்­றுக்­கொண்ட போது அந்த எண்­ணிக்கை 270 ஆக குறை­வ­டைந்­தி­ருந்­தது.

கடு­மை­யான பயங்­க­ர­வாத குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்கப்­பட்­டுள்­ளனர். மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் துணை இரா­ணுவக் குழுக்­களை உரு­வாக்­க­வில்லை.

கருணா கூட 2005 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தா­கவே புலி­க­ளி­ட­மி­ருந்து பிள­வ­டைந்து செயற்­பட்­டனர்., துணை இரா­ணுவக் குழுக்­க­ளுக்கு முன்­னைய அர­சாங்கம் ஆயு­தங்­களை வழங்­கி­யது.

வெள்­ளைவான் கடத்­தல்­களில் எனக்கு தொடர்பு கிடை­யாது. 1986 – 1989 ஆம் ஆண்­டு­களில் பல வர்ண வேன்களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான இளைஞர் யுவ­திகள் தெற்கில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த வரலாற்றை அமைச்சர் மேர்வின் சில்வா மறந்து விட்டு கருத்து வெளியிட்டு வருகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளே லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்தனர். நாமே அந்த விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர்ந்தோம்.

Share.
Leave A Reply

Exit mobile version