தமிழில் படைக்கப்பட்ட ஆதி இலக்கிய படைப்புகளில் முக்கியமானது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஆகும்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இந்த சிலப்பதிகாரத்தின் முதன்மை பாத்திரமான கண்ணகி பெண்டீர் குலத்தின் திலகமாக இராயிரம் வருடங்கள் கழித்து இன்றும் போற்றப்படுகிறாள்.
மாட்சிமை தாங்கிய பெண்ணின் கோபம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று சொல்லிய இக்காப்பியம் தமிழின் தவிர்க்க முடியாத படைப்புகளில் ஒன்றாகும்.
இக்காப்பியத்தின் படி தவறான நீதியின் காரணமாக கணவனை இழந்த கண்ணகி மதுரை மாநகரை எரித்து விடுவாள்.ஆனால் அதற்கு பிறகு கண்ணகி என்ன ஆனாள் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது.
வாருங்கள் மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் என்பதை தெரிந்து கொள்வோம்.kanaki
கொடுங்களூர் பகவதி அம்மன் கோயில்
உலகத்தில் இருக்கும் பத்ர காளி அம்மன் கோயில்களிலேயே மிகவும் உக்கிரமான ரூபங்களில் இருக்கும் இடமாக கொடுங்களூர் கோயில் சொல்லப்படுகிறது. இங்கே எட்டு கரங்களுடன் அதி உட்கிரமாக அருள் பாலிக்கிறார் கொடுங்களூர் பகவதி அம்மன்.
மதுரையை எரித்த பிறகு உக்கிர கோலத்தில் கண்ணகி இந்த கோயிலுக்கு வந்து அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டிருக்கிறாள்.
அதன் பயனாக கண்ணகியை தன்னுள் இழுத்துக்கொண்டு அவருக்கு முக்தி வழங்கியதாக இங்குள்ள தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கண்ணகி முக்தி அடைந்த இடம் என்பதை தாண்டி முப்பெரும் தமிழ் மன்னாரில் ஒருவரான சேரர்களின் ஆட்சி காலத்தின் போது மகோதயாபுரம் என இவ்விடம் அழைக்கப்பட்டு சேர ஆட்சியின் தலைமை பீடமாகவும் திகழ்ந்திருக்கிறது.
இக்கோயிலை பற்றி சொல்லப்படும் மற்றொரு கதைப்படி விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை ‘தருகா’ என்ற அரக்கன் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க சிவனை நோக்கி வணங்கியதாகவும் அதன் பயனாக பார்வதி தேவி பத்ர காளியாக வந்து அசுரனை அழித்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

கொடுங்கல்லூர் பரணி மற்றும் தலப்போலி என்ற முக்கியமான திருவிழாக்கள் இந்த பகவதி கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் திரண்டு பகவதி அம்மனை வழிபடுகின்றனர்.

இக்கோயில் அமைந்திருக்கும் கொடுங்களூர் நகரை பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்
கொடுங்கல்லூர் – ஆலயங்கள் மற்றும் வரலாற்றுத்தடங்கள் நிறைந்த எழில் நகரம்

திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் எனும் சிறு நகரம் மலபார் கடற்கரைப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இங்குள்ள பகவதி கோயில் மற்றும் துறைமுகத்திற்காக இந்நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லும் பெருமைமிகு வரலாற்றுப் பின்னணியையும் இது வாய்க்கப் பெற்றுள்ளது. 7ம் நூற்றாண்டில் சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய வரலாற்றுக்கீர்த்தியும் இதற்குண்டு.

 

 

கடற்கரைக்கு அருகில் அமைந்திருப்பதால் ஒரு முக்கிய வணிக கேந்திரமாக அந்நாளில் இது திகழ்ந்திருக்கிறது. நவீன வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஆசியா மைனர் மற்றும் எகிப்து போன்றவற்றுடன் இந்த நகரம் வாணிபத்தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புராதன வரலாற்றோடு கலந்த செழுமையான பாரம்பரியம்

புராதன காலத்திலேயே கொடுங்கல்லூர் நகரம் முக்கியமான வாசனைப்பொருள் ஏற்றுமதி நகரமாக பிரசித்தி பெற்று விளங்கியிருக்கிறது.

யவனப்பிரியா என்ற பெயரில் அந்நாளில் அழைக்கப்பட்ட மிளகு இங்கிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

கடல் மற்றும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களால் சூழப்பட்டுள்ள இந்த பழமையான நகரம் மிக சுவாரசியமான – வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய நாகரிக சான்றுகளையும் பெற்றுள்ளது.

அதாவது கி.மு 1 ம் நூற்றாண்டிலேயே இந்த துறைமுக நகரம் கடல் சார் வாணிபத்தில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று நம்புவதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கொடுங்கல்லூரின் பாரம்பரியச் செழுமையானது இதன் கடற்கரை துறைமுக அமைப்பின் மூலம் வாய்க்கப்பெற்றுள்ளது.

கிறிஸ்த்துவம், ஜூதாயிசம், இஸ்லாம் மற்றும் பல அயல் நாட்டு மத வடிவங்கள் இந்த கடற்கரை வழியாகவே இப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்றே கூறலாம்.

கி.பி 52ம் ஆண்டில் கிறிஸ்துவின் பிரதான சீடர்களில் ஒருவரான புனித தோமா இந்த கடற்கரையில் முதன் முதலாக வந்திறங்கியதாக நம்பப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் கிறிஸ்துவ தேவாலயம் இங்குதான் கட்டப்பட்டது என்ற பெருமையையும் கொடுங்கல்லூர் பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாற்றுப் பின்னணியையும் இந்த நகரம் தன்னுள் கொண்டிருக்கிறது.

இங்குள்ள சேரமான் ஜும்மா மஸ்ஜித் எனும் மசூதி இந்தியாவின் முதல் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமையுடன் கால ஓட்டத்தில் நீடித்து நிலைத்து நிற்கிறது.

பலவித மதம், பாரம்பரியம் யாவும் கலந்த கதம்பக்கலாச்சாரம்

தற்கால கொடுங்கல்லூர் நகரமானது வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொழுதுபோக்கு பயணிகள் போன்ற இருசாராரையும் திருப்திபடுத்தும் விதத்தில் காட்சியளிக்கிறது.

பொதுவாக பயணிகள் இங்குள்ள அழகிய கடற்கரையை கண்டு ரசிக்கவும், ஆங்காங்கு நிற்கும் வரலாற்றுச்சின்னங்களில் கடந்த போன காலம் விட்டுச்சென்றிருக்கும் உறைந்து போன தடயங்களை தரிசிக்கவும் வருகை தருகின்றனர்.

இங்குள்ள ஆலயங்களில் ஆன்மீக சாந்தியை தேடி வரும் பக்தர்களும் உண்டு. ஒரு புறம் அரபிக்கடல் மறுபுறம் பெரியார் ஆறு போன்றவற்றால் சூழப்பட்டுள்ள இந்த புராதன நகரம் இயற்கை ஆர்வலர்களையும் தன் அற்புதமான புவியியல் அழகம்சங்களால் ஈர்க்கிறது.

பொழுதுபோக்கை நாடும் சுற்றுலாப்பயணிக்கு இந்நகரில் ஏராளமான அம்சங்கள் காத்திருக்கின்றன. தற்கால கேரளாவில் கொடுங்கல்லூர் என்றாலே ஞாபகம் வருவது இங்குள்ள பகவதி அம்மன் கோயில்தான் எனும் அளவுக்கு நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த குரும்பா பகவதி கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.

இது குரும்பாக்காவு கோயில் அல்லது கொடுங்கல்லூர் பகவத் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பத்ரகாளி அம்மன் குடிகொண்டுள்ளது.

கொடுங்கல்லூர் பரணி மற்றும் தலப்போலி போன்ற முக்கியமான திருவிழாக்கள் இந்த பகவதி கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் திரண்டு பகவதி அம்மனை வழிபடுகின்றனர்.

கீழ்த்தலி மஹாதேவா கோயில், கூடல்மாணிக்யம் கோயில், மர் தோமா சன்னதி, சிருங்காபுரம் மஹாதேவா கோயில், திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் மற்றும் திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் போன்றவை இங்குள்ள இதர முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும்.

தங்கநிற மணற்பரப்பையும் அசைந்தாடும் தென்னை மரங்களையும் கொண்ட கொடுங்கல்லூர் கடிப்புரம் பீச் எனப்படும் அழகிய கடற்கரையும் பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.

இங்கு பல வித நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. சிதிலமடைந்து காணப்படும் கொட்டப்புரம் கோட்டையும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பயணிகளால் ரசிக்கப்படுகிறது.

வித்தியாசமான சுற்றுலா அனுபவம்

கேரளா மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கொடுங்கல்லூர் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கிறது. திருச்சூர் மற்றும் கொச்சியிலிருந்து சமதூரத்தில் அமைந்திருப்பதால் வட மற்றும் தென் கேரளப்பகுதிகளுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மற்ற எந்த நகரங்களிலும் பார்க்க முடியாத அளவுக்கு இங்கு நீர்வழிப்போக்குவரத்து அதிகமாக நடைமுறை பயன்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள வெஸ்ட் கோஸ்ட் கெனால்’ எனும் போக்குவரத்துக்கால்வாய் இந்தியாவிலேயே முக்கியமான படகுப்போக்குவரத்து கால்வாயாக விளங்குவதுடன் சுற்றுலா முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

எல்லா தென்னிந்திய நகரங்களையும் போலவே கொடுங்கல்லூர் நகரமும் வெப்ப மண்டலத்தில் தான் அமைந்துள்ளது. இருப்பினும் கடற்கரைக்கு அருகில் உள்ளதால் இனிமையான சூழலை கொண்டுள்ளது.

உயிரோட்டமிக்க வரலாற்றுப்பின்னணியும், பக்தி மணம் கமழும் ஆன்மீக அடையாளத்தையும் கொண்டுள்ள இந்த கொடுங்கல்லூர் நகரம் ஒரு வித்தியாசமான பயண அனுபவத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்க காத்திருக்கிறது

Share.
Leave A Reply

Exit mobile version