மந்திரவாதியின் உயிர் கிளியின் இதயத்திற்குள் இருப்பது போல, சோட்டா ராஜனின் உயிர் இன்டர்போலின் கைகைளில் இருக்கிறது. சோட்டா ராஜனுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பை இந்திய உளவுத்துறை ஒரு நொடி விலக்கிக்கொண்டாலும் அடுத்த நொடி குறி வைத்து காத்துக்கொண்டிருக்கும் தாவூத்தின் துப்பாக்கியின் தோட்டாக்கள் சோட்டா ராஜனின் மேல் பாயும்.

கடந்த வாரம் சோட்டா ராஜன் இந்தோனேஷியா போலீஸ் கைகளில் சிக்கியது எப்படி என்று ஊடகங்களில் அடிபடும் செய்திகள் அனைத்தையும் அப்படியே தூக்கி விழுங்கி இருக்கிறது சோட்டாராஜனின் வாக்கு மூலம்.

dawood 9 600 1“ வழக்கமாக வெளியே கிழம்பினேன், எப்பொழுதும் போல கவனமாக தெருவில் யாரும் இருகிறார்களா என்று எனது ஆட்கள் கவனித்தபிறகுதான் வெளியே சென்றேன். கொஞ்சநேரம் வெளியே சென்றபிறகு எங்களை இரண்டு நபர்கள் பின்தொடர்ந்தனர்.

அவர்களை பார்த்தால் தாவூத்தின் ஆட்கள் போல இருந்தது. அப்படியே அங்கிருந்து மற்றொரு காரில் தப்பித்து வேறு வழியாக எஸ்கேப் ஆகினேன்.

இரண்டு நாள் கழித்து பாலியில் செய்துவரும் மீன் தொழில்களை பார்க்க சென்று கொண்டிருக்கும்பொழுது, வெளியே அதே நபர்கள் என்னை கொல்வதற்கு துப்பாக்கியோடு காத்திருப்பதாக தகவல் வந்தது. நானும் சந்தேகத்தின் பேரில் வெளியே சென்று பார்த்த பொழுது காரில் அவர்கள் கொலைவெறியோடு காத்திருந்தார்கள்.

நான் வெளியே போகாமல் அப்படியே திருப்பி வந்துவிட்டேன். உள்ளே பயணிகள் காத்திருக்கும் அறையில் காத்திருந்தேன். வெளியே போனால் மரணம் உறுதி என்று என் மனது நம்பியது. உடனடியாக எனக்கு வேண்டியவர்களை தொடர்பு கொண்டேன்.

யாரும் அவசரத்திற்கு உதவவில்லை. நெருக்கடியான அந்த நிலையில் வாழ்வா, சாவா? என்கிற நிலை உருவானது. சட்டென முடிவெடுத்தேன்.

அருகில் இருந்த போலீசிடம் சென்று, ‘என்னை கைது செய்யுங்கள். நான் ஒரு குற்றவாளி. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி, என் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர் என்றேன். நான் சொன்னதை அப்பொழுது அவர்கள் நம்பவில்லை.

அவர்களிடம் உண்மையை மறுபடியும் எடுத்து சொன்னேன். சிறிது நேரம் அவர்கள் தலைமை அதிகாரிகளிடம் பேசிவிட்டு என்னை கைது செய்து பத்திரமாக கொண்டு சென்றனர்’ என்று இந்திய அதிகாரியிடம் சொல்லி இருக்கிறான் சோட்டா ராஜன்.

வெளியே சென்றால் தான் எப்படியும் கொல்லப்படலாம் என்று சோட்டா ராஜன் பயந்து போய் இருப்பதால் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி உள்ளனர்.

சோட்டா ராஜன் இப்பொழுது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு பயங்கர பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதி என்பதால் இன்னமும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யார் வந்தாலும் போனாலும் கண்காணிப்புகள் கூடுதலாக அமைந்துள்ளதால் எப்பொழுதும் போல இருக்க முடியவில்லை என்று புலம்பி வருகின்றனர் மற்ற அதிகாரிகள்.

தாவூத்தின் அதிரடி வளர்ச்சியில் சோட்டா ராஜன் தவிர்க்க முடியாத நபராக இருந்து இருக்கிறான். தாவூத்தின் முக்கிய தளபதியாக சோட்டா ராஜன் இருந்ததிற்கு காரணம், அவனது கூர்மையான அறிவும் அதிரடி நடவடிக்கையும்தான்.

எந்த வேலையை செய்தலும் அதில் மிச்சம் வைக்காமல் கனக் கச்சிதமாக செய்வதில் சோட்டா ராஜன் படு கில்லாடி. அதுதான் தாவூத் வைத்த குறியில் இருந்து இன்று வரை அவனை காப்பாற்றிவந்தது.

உலக அளவில் தாவூத்தின் தொழில் மட்டுமல்ல அவனது சொத்துக்களின் மதிப்பும் உயர உயர சோட்டா ராஜனும் முக்கியத்துவம் பெற்றான்.

சோட்டா ராஜன் குறித்து தாவூத்திடம் யார் புகார் கூறினாலும் அதை தாவூத் காது கொடுத்து கேட்கமாட்டான். அந்த அளவிற்கு செல்வாக்காக இருந்த சோட்டா ராஜனுக்கும் – தாவூத் இப்ராஹிம்க்கும் இடையே சொலைவெறி உருவாகும் அளவு பகை உருவானது எப்படி?

ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்றுதான் இருவருக்கும் பிளவை உண்டாக்கிவிட்டது. அதற்கு காரணமாக அமைந்தது தாவூத்தின் சகோதரி ஹசீனாவின் கணவன் இப்ராஹீம் பார்க்கர் கொலை.

சகோதரி ஹசீனாவை இப்ராஹீம் பார்க்கருக்கு கல்யாணம் செய்து வைத்து ஹோட்டல் தொழிலை வைத்துக் கொடுத்தான் தாவூத். பார்க்கருக்கு சினிமா மேல் பயங்கர காதல். அதனால் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தான்.

முதலில் துணை நடிகராக இருந்தவன் பின்னாளில் நல்ல கேரக்டர்கள் நடித்துக்கொண்டு இருந்தான். தாவூத்தின் மைத்துனர் என்பதால் அவனை வைத்து பெரிய அளவில் சினிமா எடுக்க பயந்தனர்.

ஒரு சிலர் தைரியத்துடன் அவனை தமது படங்களில் சிறப்பு தோற்றங்கள் தந்து நடிக்க வைத்தனர். அதனால் பல்வேறு பல்வேறு லாபங்களை அவர்கள் பார்த்தனர்.

துபாய் நகரில் இருந்தவாறே தாவூத் இப்ராஹிம் மும்பையை மட்டுமல்லாமல் பல்வேறு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தமது கட்டுப்பாடுக்குள் வைத்து இருந்தான். அவனுக்கு எல்லாமே சோட்டா ராஜன்தான்.

அவனும் துபாய் நகரில் தாவூத்தின் இதயமாக இருந்தான். தாவூத்தின் கண் அசைவுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து நடந்து கொண்டு இருந்தான்.

சோட்டா ராஜன்தான் தாவூத்தின் கருவூலத்தை வளர்த்தவன். துபாயில் இருந்து கொண்டு மும்பையில் நடக்கும் அரசு சம்பந்தப்பட்ட அணைத்து வேலைகளையும் தனக்கு வேண்டிய ஆட்களுக்கு டெண்டர் கொடுக்க சொல்லி காண்ட்ராக்ட் வேலைகளைவாங்கி கொடுத்து அதில் இருந்து கமிஷன் வாங்கி தாவூத்திற்கு கொடுத்தான்.

அதோடு நில்லாமல் மும்பையில் எந்த வேலையும் சோட்டா ராஜனின் அனுமதியில்லாமல் நடக்காது. இதனால் தாவூத்தின் எதிரியான அருண் காவ்லி உள்பட பல்வேறு நபர்களுக்கு எரிச்சலும் கோபமும் உண்டானது.

அதனால் முதலில் தாவூத்தின் ஆளான ராஜே என்பவனை குறிவைத்தான் அருண் காவ்லி. அவன்தான் தாவூத்திற்கு உள்ளுரில் தீவிரமாக வேலை செய்து வந்தவன். அதனால் அவனையும் அவனுடன் இருந்த அவனது மூன்று கூட்டாளிகளையும் அருண் காவ்லி ஆட்கள் சுட்டுக்கொன்றார்கள்.

ibrahim arun

இந்த சம்பவம் தாவூத்திற்கு பயங்கர அசிங்கத்தை கொடுத்தது. உடனடியாக தாவூத், அருண் காவ்லியை கொடூரமாக கொலை செய்ய சொன்னான். ஆனால் சோட்டா ராஜன் அருண் காவ்லியின் உடன் பிறவா சகோதரனான அசோக் ஜோஷியை கொன்றால் அவனது படைகள் உடையும் என்று கணக்கு காட்டினான்.

தாவூத்தும் ஒப்புக்கொள்ள சோட்டா ராஜனே நேரில் சென்று அசோக் ஜோஷியை சுட்டுக்கொன்றான். தாவூத் உத்தரவிட்ட 15 நாட்களில் இந்த கொலையை செய்து முடித்தான் சோட்டா ராஜன்.

பதிலடியாக தாவூத்திற்கு பணம், மற்ற பொருட்கள் கொடுத்து உதவும் பல்வேறு நபர்களை கொன்றான் அருண் காவ்லி. சோட்டா ராஜன் அருண் காவ்லியின் ஆட்களை ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்தான். இப்படியே இரண்டு பக்கமும் தலைகள் உருண்டன.

நடக்கும் சம்பவங்களை காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. உச்சகட்டமாக அருண் காவ்லியின் அண்ணன் பாபா காவ்லியை தாவூத்தின் ஆள் சுட்டுக்கொலை செய்தான்.

இதனால் அருண் காவ்லிக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லை. அருண் காவ்லியின் எல்லாமுமாக இருந்த அத்தனை பேரையும் சுட்டுக்கொன்று குவித்தான் சோட்டா ராஜன்.

நிலை தடுமாறிப்போன அருண் காவ்லி அவனது ஆட்கள் மூலம் பிரபல ஹோட்டலில் இருந்த தாவூத்தின் மைத்துனர் பார்க்கரையும் அவனது உதவியாளரையும் ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுகொன்றான்.

இந்த சம்பவத்தை செய்தது சைலேஷ், பிபின், சந்தோஷ், ராஜீ படாலா என்கிற நான்கு நபர்கள் என்பதை தெரிந்துகொண்ட தாவூத், அவர்களை தூக்கி வரசொல்லி கட்டளை போட்டான். ஆனால் அவர்களை பிடிக்கமுடியவில்லை.

அந்த நான்கு நபர்களும் ஒரே இடத்தில் தங்காமல் வேறு வேறு இடங்களுக்கு நாடோடிகள் போல ஓடிக்கொண்டே இருந்தனர். தாவூத்தும் அந்த சம்பவத்தை மறக்கும்படியாக பல்வேறு வேலைகளில் மூழ்கிவிட்டான். அதனால் அவர்களின் வாழ்நாள் நீண்டு கொண்டே சென்றது. இதற்குள் இரண்டு மாதங்கள் ஓடின.

தாவூத் வைத்த குறியிலிருந்து தப்பிவிட்டார்கள் என்பதால் அந்த நான்கு நபர்களும் பேமஸ் பிரபலமடைந்தார்கள். இதனால் பல்வேறு கொலை சம்பவங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. விறுவிறுவென அவர்கள் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து இருந்தனர்.

ஒரு கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து போகும்பொழுது அடிபட்டு இரண்டு நபர்கள் மட்டும் கீழே விழுந்தனர். அவர்களை பற்றி தெரியாத அந்த பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து அடித்துத் துவைத்து காவல்துறையினரிடம் கொடுத்தனர்.

அதற்கு பிறகுதான் தெரிந்தது அவர்கள் யார் என்கிற விஷயம். இந்த விஷயம் தாவூத்தின் காதுகளுக்கு போனது. அந்த சமயம் சோட்டா ராஜன் மும்பை நடிகை ஒருத்தியோடு பிரபல ஹோட்டலில் தங்கி இருந்தான். கொடுத்த வேலையை சரியாக செய்யவில்லை என்று சோட்டா ராஜன் மீது இந்த முறை தாவூத் வருத்தப்பட்டான்.

சிக்கிய இருவரும் பொது மக்கள் அடித்தால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். எப்படியும் தாவூத் ஆட்கள் தங்களை கொலை செய்ய வருவார்கள் என்று அவர்கள் நம்பினர். காவல்துறைக்கும் அந்த எண்ணம் இருந்தது.

அதனால் அந்த மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்த முறை தாவூத் ஒரு வேலையை செய்தான். தனது தங்கையின் கணவனை கொன்றவர்களை பழி வாங்க வேறு நபர்களை அனுப்பினான்.

போனவர்கள் கொன்றார்களா? அடுத்து என்ன நடந்தது ?

– சண். சரவணக்குமார்

தாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன் (தாதா தாவூத் தொடர்-7)

Share.
Leave A Reply

Exit mobile version