தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்த பிரான்சில் தொடரும் துயரமாக, அதிவேக இரயில் தடம் புரண்டு, அதில் பயணம் செய்த 10 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பிரான்சின் Strasbourg பகுதியில் TGV அதிவேக இரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இரயில் கவிழ்ந்த பகுதி கால்வாய் என்பதால் விபத்துக்குள்ளானவர்களை தேடும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விபத்து குறித்து அறிக்கை வெலியிட்ட ஜனாதிபதி அலுவலகம், பொதுமக்களுக்கான இரயில் சேவை நடைபெற்று வரும் பகுதியில் இந்த விபத்து நிகழவில்லை எனவும்,
இந்த விபத்தில் சிக்கிய 10 பேர் கவலைக்கிடம் என்றும், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
பாரிசில் இருந்து Strasbourg பகுதிக்கு முதன்முறையாக அதிவேக இரயில் சேவையை துவங்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.