சூரன் போரையும், திருக்கல்யாணத்தையும் ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர். 7 நாட்கள் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் கொடியேற்றம் 12. 11. 2015 வியாழக்கிழமை, நடைபெற்றது. 16. 11. 2015 திங்கட்கிழமை திருமுருகுத்தேர்த்திருவிழா நடைபெற்றது. 17. 11. 2015 செவ்வாய்க்கிழமை – சூரன்போர் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 18. 11. 2015 புதன்கிழமை காலை 07.00 மணிமுதல் – திருக்கல்யாணம் மாலை 17.00 மணிமுதல் நடைபெற்றது.
திருவிழா முழுமுதற் கடவுள் ஞானலிங்கப்பெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஞானாம்பிகை சக்தியோடு தோன்றியவர் தமிழே முருகப்பெருமான் ஆவார். சூரனுடன் போரிட்ட பெருமானை போற்றும் நாள் கந்தசஷ்டியாகும்.
முருகப்பெருமானிற்கு பல்வேறு விழாக்கள் – வழிபாடுகள் இருப்பினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக இந்த சஷ்டி நோன்பு விளங்குகின்றது. ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ எனும் வழக்குமொழியின் பொருள்: சஷ்டியில் நோன்பு இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும் என்பதாகும். இந்நோன்பு காலத்தில் பெருமானை மனதார வேண்டினால், தடையின்றிக் குழந்தைப் பேறினை ஞானலிங்கபாலன் முன்வந்து அருள்வான் என்பது ஆன்றோர் வாக்கு.
16.11.2015 திங்கட்கிழமை 16.00 மணிமுதல் ஞானசக்திவேல் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து 19.00 மணிக்கு ஞானலிங்கேச்சுரத்து ஞானவடிவேலன் ஞானமுருகுத் திருத்தேர் ஏறி ஞானத்திருவீதி திருவுலா வந்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
17.11.2015 16.00 மணிமுதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சூரன்போர் திருக்கோவில் முன்பு உள்ள ஐரோப்பாத்திடலில் நடைபெற்றது.சூரன்போர்கண்டு இளந்தமிழ்ச் செல்வங்களும், பெரியோர்களும் தாம் தாய் நாட்டில் நிறப்தாக உணர்ந்தனர். ஐரோப்பாத்திடல் ஞானலிங்கேச்சுரர் திடலாக விரிந்து, தமிழ் மக்கள் நிறைந்து காணப்பட்டனர்.
20-11-2015
இலங்கையில் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி மலையகம் கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை சூரன் போர் இடம்பெற்றது. மலையகத்தில் அட்டன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது.
வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது. இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதேவேளை மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள அருள் மிகு ஞான வைரவர் தேவஸ்தானத்தில் கந்த சஷ்டி விரதத்தின் சூரசம் ஹாரம் இன்று இடம் பெற்றது. வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம் பெற்றது.