இதில் பாஜிரோ மஸ்தானி வசூலில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் ஜெய் கங்காஜல் டிரெய்லர் யூடியூபில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.
இந்த வருடத்தில் வெளியான தில் தடக்னே தோ, பாஜிரோ மஸ்தானி ஆகிய 2 படங்களில் பிரியங்கா நடித்திருந்தார். இவற்றில் தில் தடக்னே சூப்பர்ஹிட் படமாக மாறியது. வரலாற்றுப் படமாக வெளியான பாஜிரோ மஸ்தானி வசூலில் பல்வேறு சாதனைகளைத் தற்போது புரிந்து வருகிறது. 125 கோடியில் வெளியான இப்படம் இதுவரை 200 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர்.
இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் குவான்டிகோ தொடர்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் தற்போது புகழ்பெற்று வருகிறார் பிரியங்கா சோப்ரா.
2003ல் வெளியாகி வெற்றி பெற்ற கங்காஜல் படத்தின் 2 வது பாகமாக உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4 ம் தேதி வெளியாகிறது. அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகளுக்கு அஞ்சாத அதிரடி காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
இந்த வருடத்தில் பிரியங்கா சோப்ராவின் புகழை மேலும் அதிகரிக்கும் விதமான நிகழ்வு ஒன்று நேற்று நடந்திருக்கிறது. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெய் கங்காஜல் என்ற ஆக்ஷன் படத்தின் டிரெய்லர் கடந்த 22 ம் தேதி வெளியானது. இந்நிலையில் நேற்று அந்த டிரெய்லர் யூடியூபில் இந்தியர்கள் அதிகம் பார்த்து ரசித்த 6 வது டிரெய்லர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தது போல விரைவில் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றிலும் பிரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் பிரியங்கா சோப்ரா மவுனம் சாதித்து வருகிறார்.