குரோஷியாவின் ஜனாதிபதி கொலிண்டா கிராபர் கிட்டாரோவிச், பிகினியில் (நீச்சலுடை) கடற்கரையில் காணப்பட்டதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தகவலொன்று பரவி வருகிறது.
பரபரப்பை ஏற்படுத்திய நீச்சலுடை புகைப்படங்கள் (கொகோ ஆஸ்டின்)
இதற்கு ஆதாரமாக புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
47 வயதான ஜனாதிபதி கொலிண்டா கிராபர் வசீகரமான தோற்றம் கொண்டவர் தான்.
தனது பணியில் கவனம் செலுத்தும் அதேவேளை, தனது செல்பீ படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதுண்டு.
எவ்வாறெனினும் மேற்படி புகைப்படங்களில் நீச்சலுடையில் காணப்படும் பெண் குரோஷிய ஜனாதிபதி காலிண்டா கிராபர் கிட்டாரோவிச் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
கடற்கரையொன்றில் பிகினியில் காணப்படும் மேற்படி பெண் அமெரிக்க நடிகையும் மொடலுமான கொகோ ஆஸ்டின் ஆவார்.
அதன்பின் உலகின் மிக கவர்ச்சியான ஜனாதிபதி என குரோஷிய ஜனாதிபதி கொலிண்டா கிராபரை பலரும் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி அவர்தான்.
கொலிண்டா கிராபர் ஜனாதிபதியாக தெரிவானவுடனேயே அவர் நீச்சலுடையில் காணப்படும் புகைப்படம் எனக் கூறப்பட்டு ஒரு படம் வெளியாகியது.
பின்னர் அது ஒரு ஆபாசப்பட நடிகையின் படம் என்பது தெரியவந்தது.
அமெரிக்காவில் கல்வி கற்ற கொலிண்டா கிராபர், குரோஷியன், ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகேய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
அத்துடன் பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலிய மொழிகளையும் புரிந்து கொள்ளக்கூடியவர்.
1996ஆம் ஆண்டு ஜேக்கவ் கிட்டாரோவிச்சை திருமணம் செய்த திருமதி கொலிண்டாவுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
நேட்டோ அமைப்பின் உதவிச் செயலாளர் நாயகமாகவும் குரோஷிய ஜனாதிபதி கொலிண்டா கிராபர் கிட்டாரோவிச் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.