அயர்­லாந்தில் முற்­றிலும் ஒரே மாதி­ரி­யான தோற்றம் கொண்ட இரு யுவ­திகள், தாம் உற­வி­னர்­களா என்­பதை கண்டறிவ­தற்­காக மர­பணு பரி­சோ­தனை நடத்­தி­யுள்­ளனர். எனினும் இவர்கள் எவ்­வ­கை­யிலும் உற­வி­னர்கள் அல்லர் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

14395088நியாம் கியேனி, இரேன் அடம்ஸ் ஆகிய இவ்­விரு யுவ­தி­களும் இரட்டைப் பிற­விகள் போன்று ஆச்­ச­ரி­ய­ம­ளிக்கும் வகையில் ஒரே தோற்­றத்­துடன் காணப்­ப­டு­கின்­றனர். ஆனால், இவர்கள் இரட்­டை­யர்­களோ, சகோ­த­ரி­களோ அல்லர்.

அதை­ய­டுத்து, தமது குடும்­பங்கள் ஏதேனும் வழியில் உற­வி­னர்­க­ளாக இருக்­கலாம் எனக் கரு­திய இவ்­வி­ரு­வரும் மரபணு பரி­சோ­த­னை­க­ளையும் நடத்தத் தீர்­மா­னித்­தனர்.

ஆனால், இவர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு இடை­யிலும் உயி­ரியல் ரீதி­யான எவ்­வி­த­ உ­றவும் இல்லை என்­பது தெரியவந்துள்­ளது.

அதே­வேளை, நியாம் கியே­னியின் மூதா­தை­யினர் 20,000 வரு­டங்­க­ளுக்கு முன் தென்மேற்கு ஆசி­யா­வி­லி­ருந்து வந்தவர்கள் எனவும், இரேன் அடம்ஸின் குடும்­பத்­தினர் 20,000 வரு­டங்­க­ளுக்கு முன் மொச­பத்­தே­மி­யாவை சேர்ந்தவர்களாக இருந்­தனர் எனவும் ஆய்­வுகள் மூலம் தெரி­ய­ வந்­துள்­ளதாம்.

எமது குடும்பங்கள் 2 இலட்சம் வருடங்களுக்கு முன்னராவது தொடர்புபட்டிருந்திருக்கலாம் என நான் கருதினேன் என்கிறார் 27 வயதான நியாம்.

Share.
Leave A Reply

Exit mobile version