ஐ.என்.எஸ். விக்­கி­ர­மா­தித்யா என்ற இந்­தியக் கடற்­ப­டையின் விமா­னந்­தாங்கிப் போர்க்­கப்­பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாச­கா­ரியும், கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து சென்ற பின்னர், பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் ஒரு செய்தி­யாளர் மாநாடு நடத்­தப்­பட்­டது.

பாது­காப்புச் செயலர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சியும், கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜேகுணவர்தனவும் இணைந்து நடத்­திய இந்தச் செய்­தி­யாளர் மாநாட்டில், இலங்­கையை நோக்கி அதி­க­ளவில் போர்க்­கப்­பல்கள் வரத் தொடங்­கி­யுள்­ளமை ஏன் என்­பது குறித்து விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

கடந்த ஜுலை மாதத்­துக்குப் பிந்­திய ஆறு மாதங்­களில் ஒன்­பது நாடு­களின் 25 போர்க்­கப்­பல்கள், இலங்­கைக்கு வந்து சென்­றதை ஒரு முக்­கி­ய­மான நிகழ்­வாக இவர்கள் எடுத்துக் கூறி­யி­ருந்­தனர்.

அடுத்த இரண்டு மாதங்­க­ளுக்குள் மேலும் ஆறு வெளி­நாட்டுப் போர்க்­கப்­பல்கள் வர­வுள்­ள­தா­கவும் கடற்­படைத் தள­பதி தெரி­வித்­தி­ருந்தார்.

INS_Vickramaditya-colombo-5INS_Vickramaditya-colombo

போர் முடி­வுக்கு வந்த பின்னர் வெளி­நாட்டுப் போர்க்­கப்­பல்கள் இலங்கைத் துறை­மு­கங்­க­ளுக்கு வருகை தரு­வது அதிகரித்­த­தா­யினும், தற்­போது திடீ­ரென இவற்றின் வருகை அதி­க­ரிப்­புக்கு, இலங்­கையின் பாது­காப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள முன்­னேற்­றமே காரணம் என்று அவர்­களால் எடுத்துக் கூறப்­பட்­டது.

வெளி­நாட்டுப் போர்க்­கப்­பல்கள் அதி­க­ளவில் வரு­வது குறித்து இதற்கு முன்னர் ஒரு­போதும் பாது­காப்பு அமைச்சு இத்தகைய செய்­தி­யாளர் சந்­திப்­பு­களை நடத்தி விளக்­க­ம­ளித்­த­தில்லை.

இப்­போது இத்­த­கை­ய­தொரு செய்­தி­யாளர் சந்­திப்பின் ஊடாக, சீனப் போர்க்­கப்­பல்கள், அதை­ய­டுத்து இந்­தியப் போர்க்கப்பல்­களின் வருகை தொடர்­பாக எழுந்­தி­ருக்­கின்ற சந்­தே­கங்­க­ளுக்கு முடிவு கட்ட அர­சாங்கம் முனை­வ­தா­கவே தெரி­கி­றது.

இத்­த­கைய பய­ணங்­க­ளினால், வெளி­நாட்டுப் போர்க்­கப்­பல்­களில் பயிற்சி பெறும் வாய்ப்பு கடற்­ப­டை­யி­ன­ருக்குக் கிடைக்­கி­றது, பாது­காப்­பான நாடு என்று சர்­வ­தேச மதிப்பு அதி­க­ரிக்­கி­றது என்­பன போன்ற நியா­யங்­களை பாது­காப்புச் செய­லரும் கடற்­படைத் தள­ப­தியும் அடுக்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இதன் மூலம், பூகோள அர­சியல் போட்­டியில் இலங்கை சிக்கிக் கொள்­ள­வில்லை என்­பது போன்ற தோற்­றத்தை ஏற்படுத்திக் கொள்­ளவே அர­சாங்கம் விரும்­பு­கி­றது போலுள்­ளது.

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் அண்­மையில் முதல் முறை­யாக மூன்று சீனப் போர்க்­கப்­பல்கள் கொழும்பு வந்தன.

அவை புறப்­பட்டுச் சென்று, ஓரிரு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் இந்­தியப் போர்க்­கப்­பல்கள் கொழும்புத் துறை­மு­கத்­துக்குள் நுழைந்­தன. இவை சர்­வ­தேச பாது­காப்பு நிபு­ணர்­களை உற்று நோக்க வைத்­தி­ருந்­தன.

அது­மட்­டு­மன்றி, கொழும்புத் துறை­மு­கத்­துக்குள் இந்­திய விமா­னந்­தாங்கிக் கப்­பல்­க­ளுக்கு வர­வேற்பளிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்த போது, துறை­மு­கத்­துக்கு அப்பால் உள்ள கடலில் சீனப் போர்க்­கப்­பல்­க­ளுடன் கடற்­ப­டையின் ஆழ்­கடல் ரோந்துக் கப்­ப­லான சமுத்ர பயிற்­சியில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தது.

இது, இரண்டு நாடு­க­ளையும் சம­நி­லையில் வைத்­தி­ருக்­கிறோம் என்று காட்­டு­வ­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவும் கூட பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கைத் துறை­மு­கத்தைப் பயன்­ப­டுத்தும் சீனப் போர்க்­கப்­பல்கள் விட­யத்தில், உலகின் முக்­கிய நாடு­க­ளான அமெரிக்கா, இந்­தியா, ஜப்பான் ஆகி­ய­வற்­றுக்கு சந்­தே­கங்கள் இருக்­கின்­றன.

அதிலும், ஏடன் வளை­கு­டாவில், சோமா­லிய கடற்­ப­ரப்­பை­யொட்­டி­ய­தாக கடற்­கொள்­ளை­களைத் தடுக்கும் நட­வ­டிக்கை என்ற பெயரில், சீன தனது கப்­பற்­படை அணி ஒன்றை நிரந்­த­ர­மா­கவே நிறுத்தி வரு­கி­றது.

தற்­போது, இந்தப் பணிக்கு சீனக் கடற்­ப­டையின் 22ஆவது கப்­பற்­படை செய­லணி அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

21ஆவது கப்­பல்­படை செய­லணி ஏடன் வளை­கு­டாவில் பாது­காப்பு பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில்தான், அண்­மையில் கொழும்புத் துறை­முகம் வந்­தி­ருந்­தது.

அந்தப் போர்க்­கப்­பல்கள், இலங்கை வரு­வ­தற்கு முன்னர் பாகிஸ்­தானின் கராச்சி துறை­மு­கத்தில் தரித்து பயிற்­சியில் ஈடு­பட்­டன.

கொழும்­பிலும் தரித்து நின்றுவிட்டு பயிற்­சி­களில் ஈடு­பட்­டன. அதை­ய­டுத்து, பங்­க­ளாதேஷ் சென்று விட்டுத்தான் அவை சீனா செல்­கின்­றன.

ஏடன் வளை­கு­டா­வுக்கு அணி­ய­ணி­யாக போர்க்­கப்­பல்­களை சீனா அனுப்பி வரு­வ­தற்கு இன்­னொரு காரணம், அவை செல்லும் போதும், திரும்பி வரும் போதும் சீனாவின் நலன்­க­ளுக்குத் தேவை­யான தளங்­களில் தரித்துச் செல்­கின்­றன.

இந்­தியப் பெருங்­கடல் வழி­யாக ஆபி­ரிக்கா வரையில் சீனா தனது தளங்­களை அமைப்­ப­தற்கு சுமார் 18 துறைமுகங்களைத் தெரிவு செய்து வைத்­தி­ருப்­ப­தாக சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் செய்­திகள் வெளி­யா­கின. அதில் அம்பாந்தோட்­டையும் ஒன்று.

அவ்­வா­றான தளங்­களின் மீதான ஆதிக்­கத்தை இந்த பாது­காப்பு அணியை அனுப்­பு­வதன் மூலம், சீனா உறு­திப்­ப­டுத்தி வந்தி­ருக்­கி­றது.

ஏடன் வளை­கு­டாவிலிருந்து திரும்­பிய சீனப் போர்க்­கப்­பல்கள், விநி­யோகத் தேவை­க­ளுக்­காக கொழும்புத் துறை­முகம் வர­வில்லை.

கராச்­சியில் தரித்து நின்ற சீனப் போர்க்­கப்­பல்கள், இலங்­கையில் தரிக்­கா­ம­லேயே பங்­க­ளா­தே­ஷுக்குச் சென்­றி­ருக்­கலாம். ஆனால் அவ்­வாறு செய்­யாமல் கொழும்புத் துறை­முகம் வந்து சென்­றன.

கொழும்புத் துறை­மு­கத்தை விநி­யோகத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்த முடி­யா­தி­ருந்த கடந்த ஒரு ஆண்­டிலும் இந்தியப் பெருங்­கடல் வழி­யாக சீனப் போர்க்­கப்­பல்கள், பயணம் செய்­தன.

எனவே, விநி­யோகத் தேவைக்­காக கொழும்புத் துறை­மு­கத்தை நாடு­வது என்­பது முற்­றிலும் சரி­யான கார­ண­மாகக் கருத முடி­யாது.

சீனா தனது கப்­பல்­களின் அணியை தொடர்ச்­சி­யாக ஏடன் வளை­கு­டா­வுக்கு அனுப்பி வைப்­பதன் மூலம், தனது வர்த்­தக நலன்­களை மட்­டு­மன்றி, இரா­ணுவ நலன்­க­ளையும் உறுதி செய்து கொள்­வ­தற்குப் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது.

ஏடன் வளை­கு­டாவில் பாது­காப்பில் ஈடு­படும் கப்­பல்­படை அணி­களின் விநி­யோகத் தேவையைக் காரணம் காட்டித் தான், ஆபி­ரிக்க நாடான டிஜி­போட்­டியில் தளம் அமைக்க சீனா முடிவும் செய்­தி­ருக்­கி­றது.

இதனால்தான் ஏடன் வளை­கு­டாவில் சீனா மேற்­கொண்டு வரும், கடற்­பா­து­காப்பு நட­வ­டிக்கை குறித்து அமெ­ரிக்கா போன்ற நாடுகள் சந்­தேகம் கொண்­டி­ருக்­கின்­றன.

இம்­மாதம் முதல் வாரத்தில் புது­டில்­லிக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்க கடற்­ப­டையின் பசுபிக் கப்பற்படைகளின் தள­பதி அட்­மிரல் ஸ்கொட் ஸ்விப்ட், இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஆர்.கே. டோவ­னுடன் நடத்­திய பேச்­சுக்­களின் போது, இந்த விவ­காரம் குறித்தே அதி­க­மாக ஆராய்ந்­தி­ருந்தார்.

அதா­வது, இந்­தியப் பெருங்கடலில் சீனா தனது கடற்­ப­டையை முன்­ன­கர்த்தி வரு­வதன் நோக்கம், இந்த விட­யத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்­பி­டிக்­காமை குறித்து அமெ­ரிக்கத் தள­பதி சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருந்தார்.

கடற்­கொள்ளை எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் சீனா, நீர்­மூழ்­கி­களை பயன்­ப­டுத்தி வரு­வது குறித்தும் அவர் ஆச்­ச­ரி­யத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

சீனா தனது வர்த்­தக நலன்­களை பாது­காப்­பது என்ற பெயரில் பாது­காப்பு நலன்­களை உறு­திப்­ப­டுத்தி வரு­வது தான், இந்தியா, சீனா, ஜப்­பா­னிய கூட்­ட­ணிக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

சீனாவின் இந்த வியூ­கத்­துக்குள் எப்­போதும், இலங்­கையும் ஒரு மைய­மா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

சீனாவின் பொரு­ளா­தார பலம், அதனை விட்டு விலக முடி­யாத நிலையை இலங்­கைக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு சீனாவின் தயவு தேவைப்­ப­டு­வதால் தான், இந்­திய, அமெ­ரிக்க நலன்­களைக் கருத்தில் கொண்டு இடை­நி­றுத்­தப்­பட்ட திட்­டங்­க­ளுக்குக் கூட பச்­சைக்­கொடி காட்டும் நிலைக்கு இலங்கை அர­சாங்கம் வந்திருக்கிறது.

அதேவேளை, சீனாவின் பாதுகாப்பு நலன்கள் விடயத்தில் இந்தியாவையோ, அமெரிக்காவையோ பகைத்துக் கொள்ளவும் இலங்கை தயாராக இல்லை.

இந்தப் பின்­ன­ணியில் தான், சீன-, இந்­தியக் கடற்­படைக் கப்­பல்­களின் வரு­கையை, மூலோ­பாய நோக்­கங்­க­ளாக வெளிப்ப­டுத்­தாமல், அவற்றை முக்­கி­யத்­து­வ­மற்­ற­தாக வெளிப்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கி­றது பாதுகாப்பு அமைச்சு.

ஆனால், சீனக் கப்­பல்­களின் கொழும்பு வருகைதான், ஐ.என்.எஸ். விக்­கி­ர­மா­தித்­யாவை கொழும்­புக்கு அனுப்பும் முடிவை எடுக்க வைத்­தது என்­பதை இந்­திய கடற்­ப­டையின் பேச்­சாளர் கப்டன் டி.கே.சர்மா உறுதி செய்­தி­ருக்­கிறார்.

இதற்குப் பின்­னரும், மூலோ­பாய நலன்­க­ளுக்­கான போட்­டிக்குள் இலங்கை இல்லை என்று, முழுப் பூச­ணிக்­காயை சோற்றில் மறைக்க கொழும்பு முயல்­வ­தை­யிட்டு ஆச்சரி­யப்­படத்தான் முடிகிறது.

-ஹரிகரன்

Share.
Leave A Reply

Exit mobile version