மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (6) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்

கடந்த மாதம் 27 ம்திகதி கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் மாலைநேரம் பிரத்தியோக வகுப்புக்குச் சென்று திரும்புகையில் அச்சிறுமி அரசடித்தீவில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த குறித்த நபரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யவில்லை என கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதன்கிழமை (4) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியைக் கடத்திச் சென்றவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கைது செய்துள்ளதுடன் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியையும் மீட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version