டெல்லி: தேனிலவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புகையில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்ற பெண் மாயமாகிவிட்டார். அவர் தனது காதலருடன் ஓட்டம்பிடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த புதுமண தம்பதிகள் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பாக்டோக்ராவுக்கு தேனிலவுக்கு சென்றனர்.
தேனிலவை முடித்துக் கொண்டு அவர்கள் ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் திங்கட்கிழமை மாலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்தனர்.
அங்கிருந்து வேறு விமானம் மூலம் அவர்கள் லக்னோவுக்கு கிளம்ப வேண்டியது.இந்நிலையில் அந்த பெண் தனது கைப்பை மற்றும் செல்போனை கணவரிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
கழிவறைக்கு சென்றவர் 30 நிமிடங்கள் ஆகியும் வரவில்லை.விமான நிலையம் முழுவதும் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது மனைவி மாயமானது குறித்து விமான நிலைய போலீசாரிடம் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை பார்த்தபோது நீல நிற சேலை அணிந்து கழிவறைக்கு சென்ற பெண் சிறிது நேரத்தில் புர்கா அணிந்து வெளியே வந்து வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த வாலிபருடன் சென்றது தெரிய வந்தது.

கழிவறையில் இருந்து புர்கா அணிந்து வந்த பெண்ணை பார்த்தால் தனது மனைவி போன்று உள்ளது என்று அந்த நபர் தெரிவித்தார். அவரின் மனைவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version